பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அந்தநாட்கள் 'முத்தான முத்தல்லவோ என்ற பாட்டு திரையில் பாடப் பட்டபோது இது பாட்டாம்! என்று கூறிவிட்டுச் சிரித்தார். படம் முடிந்து வெளியில் வந்தோம். வெளியில் நின்று கொண்டிருந்த ஒரு டாக்சி டிரைவரைப் பார்த்து, “ஏப்பா! தி நகர் வர்ரியா?” என்று கேட்டார். "இல்லையுங்க. டவுனுக்குப் போற” என்று அவன் சொன்னான். 'டவுனுக்குப் போறவ இங்க ஏ நிறுத்திக்கிட்ட போற தானே?... முருகு. இவ டாக்சி நம்பரைக் குறிச்சுக்க" என்று சொல்லி அவனிடம் சண்டைக்குப் போய்விட்டார். கவிஞரைச் சமாதானப்படுத்தி வேறு ஒரு டாக்சியில் ஏறி இருவரும் வீடு வந்து சேர்ந்தோம். 14.2.62 இன்று கவிஞர் தமிழழகனும், காலஞ்சென்ற குழந்தைக் கவிஞர் நாக.முத்தையா அவர்களும் பாவேந்தர் இல்லத்துக்கு வந்திருந்தனர். தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தை எவ்வாறு வளர்ப்பது, எவ்வாறு செயற்படுத்துவது? என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தில் உலகின் பல நாடுகளில் இருக்கும் தமிழ்க் கவிஞர்களையும் திரட்டிப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்றே மலைநாட்டு (மலேசியாசிங்கப்பூர்) கவிஞர்களுக்கு அறிக்கை ஒன்றும் எழுதப்பட்டது. அன்று எண்சீர் விருத்தம் பற்றி எங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார். "இந்த நூற்றாண்டில் எண்சீர் விருத்தத்தில் பல உத்திகளையும், கையாண்டு அதை நன்கு விளம்பரப்படுத்தியிருக் கிறேன். இன்று கவிதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள், எண்சீர் விருத்தத்தைத் தான் எழுதிப் பழகுகிறார்கள். அந்த அளவு அதை நான் கவிஞர்களுக்கு எளிமைபடுத்திக் கொடுத்திருக்கிறேன். இதைப் போலவே சிறு சிறு கருத்துக்களைக் கருவாகக் கொண்ட கட்டளைக் கலித்துறைகள் எழுதி அதையும் நன்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம்” என்று கூறினார். கூறியபடியே இரண்டு நாட்களில் அழகிய கட்டளைக் கலித்துறை ஒன்று அவர் கற்பனையில் வெளிப்பட்டது. 4.3.62 இன்று விடுமுறையாகையால் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நேராகப் பாவேந்தர் இல்லம் வந்தேன். என்னைக்