பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 67 குயில் புதுச்சேரி, தி.வ. ஆண்டு (1990) பங்குனி (18) கவிஞர் நினைவிற்கு! 'எந்தன் உந்தன் எனத் தமிழில் சொற்களேயில்லை, இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வாறுள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவதென்றால், இராசகோபாலாச்சாரிக்கும் இவர்கட்கும் என்ன வேறுபாடு? 'எம்' என்பது பன்மைச்சொல். அதனோடு பன்மைக்குரிய தம்' என்பதுதான் சேரும். எனவே எந்தம் என்று எழுத வேண்டும். உந்தம் என்பதும் அப்படியே. 'என்' என்பதும் உன் என்பதும் ஒருமைக்குரியவை. இவற்றோடு ஒருமைக்குரிய தன் சேரவேண்டும். எனவே என்றன் உன்றன் என எழுதவேண்டும். ቪ.3.62 புலியும் மானும் ஒரே நீர்த்துறையில் தண்ணிர் குடித்ததாகச் சில புராண வரலாறுகள் கூறுவதுண்டு. அத்தகைய ஒரு நிகழ்ச்சி இலக்கிய மேடையில் ஒருமுறை நடைபெற்றது; வட ஆர்க்காடு மாவட்டத் தலைநகரான வேலூரில் நடைபெற்றது. பரம நாத்திகரான பாவேந்தர் தலைமையில் பழுத்த ஆத்திகரான கிருபானந்தவாரியார் பேசினார். இந்நிகழ்ச்சி பற்றி இன்று பாவேந்தரிடம் கேட்டேன். "கொள்கையில் இரு துருவங்களாக விளங்கிய நீங்கள் ஒரே மேடையில் பேச எவ்வாறு ஒப்புக் கொண்டீர்கள். கருத்து மோதல் ஏற்படவில்லையா?" என்று கேட்டேன். "இல்லை. இரண்டு துருவங்களையும் தமிழ் என்னும் பொதுக் கொள்கை ஒன்றுபடுத்திவிட்டது. அவர் தமிழைப் பற்றி எவ்வளவு சிறப்பாகப் பேச வேண்டுமோ அவ்வளவு சிறப்பாகப் பேசினார். 'உங்களுக்கெல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன்: எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசனார். என்று என்னைப் பாராட்டிப் பேசினார். பின்னர் கணியிடை ஏறிய சுளையும் என்ற பாடலை இசையோடு பாடி அதிலுள்ள பல நயங்களைச் சுவைக்கச் சுவைக்க எடுத்துரைத்தார். இதில் ஒரு சிறப்பு