பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அந்தநாட்கள் 26.3.62 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் முடிவுற்றன. கடந்த ஒருவார காலமாகத் தேர்தல் ஆரவாரங்களிடையே பாவேந்தரைப் பார்க்க முடியவில்லை. நான் மாலை 4 மணியளவில் பாவேந்தர் இல்லம் சென்றேன். என்னைக் கண்டதும், “உன் தம்பியைப் பார்க்கப் போகணும்; புறப்படு” என்றார். என் தம்பி இளங்கோவன் அப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பாவேந்தருக்குச் சர்க்கரைநோய் இருந்ததால் வாரம் ஒருமுறை அவருக்கு வேண்டிய இன்சுலின் ஊசிமருந்து, வேறு தேவையான மாத்திரைகள் ஆகியவற்றை எடுத்து வைத்திருந்து அவனே வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுப்பான். சில சமயங்களில் பாவேந்தரே அவன் விடுதிக்குச் சென்று வாங்கிக் கொண்டு வருவதும் உண்டு. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இவருக்கு மிகவும் வேண்டிய மற்றொரு மாணவரும் அப்போது இருந்தார். அவர் பெயர்துரைசாமி, வடஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிதை எழுதுவார்; அடக்கமும் அளவு கடந்த தமிழ்ப்பற்றும் உடையவர். தற்போது மலேசியாவில் மருத்துவராகப் பணிசெய்து கொண்டு சிறப்பாக வாழ்கிறார். நானும் பாவேந்தரும் என் தம்பியின் விடுதியை அடைந்தோம். அன்று மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியின் ஆண்டுவிழா. பாவேந்தரும் நானும் விருந்தில் கலந்து கொண்டோம். பிறகு மருந்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். வீடு வந்து சேரும்போது இரவு மணி பத்திருக்கும். பாவேந்தர் படுக்கையில் சாய்ந்து கொண்டார். நான் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுவடியை விரித்து வைத்தேன். "என்ன எழுதப் போறியா?” என்று கேட்டார். "ஆமாம்! இன்று உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும். கி.பி. 1946ஆம் ஆண்டில் உங்களுக்கு நடைபெற்ற நிதியளிப்பு விழா பற்றிக் கூறவேண்டும்" என்று கேட்டேன். அவரும் கூறத் தொடங்கினார்: "என்னோட நிதியளிப்பு விழாவில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகளும் உண்டு; வேதனை தரக்கூடிய செய்திகளும் உண்டு. எனக்கு 1. வரலாற்றுச் சிறப்புள்ள இந்த நிதியளிப்பு விழா அழைப்பிதழ் 1.10.69 சுரதா இதழில் வெளிவந்துள்ளது. பிற்சேர்க்கை3ல் காண்க