பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 * - நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும், 1990ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. "...வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்..." (புறநானூறு 87) போன்று தேர்ந்து தெளிந்து வலிமையான சொற்களைப் பயன் படுத்துவதில் கைதேர்ந்தவர். தாய்த்தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர். எனவே தமிழ்க்கவிதைகளை ஆங்கி லத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டவராக விளங்கினார். எடுத்துக்காட்டாகப் பாரதிதாசனின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவை குயில் இதழ்களில் வெளி வந்துள்ளன. "நான்செய் தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான்செய் தளிக்கும் தகுதியிலே வான்போன்றான் வாழ்கவே நன்முருகு சுந்தரத்தான் வண்மையெல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து" எனப் பாராட்டி மகிழ்ந்தார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், சேர்வராயன் மலைக் கனியும் சேலத்து மாங்கனியும் ஆலைக் கரும்பும் அரும்பலா தீஞ்சுளையும் சேர்த்துக் குழைத்தும் செந்தமிழ்க் கவிபாடும் கவிதைச் செம்மல்" என்று புகழ்ந்துரைக்கப்பட்டார். புரட்சிக்கவிஞருடன் முகநக நட்பு பூணாமல் அகநக நட்புக் கொண்டவர்; நற்பண்பாளர்; ஆய்ந்தாய்ந்து பெற்ற நட்பைப் போற்றிப் பேணிய பெருந்தகையாளர். பாவேந்தர் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிய நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். பின்னர் 1979ஆம் ஆண்டு இவற்றைத் தொகுத்துப் பாவேந்தர் நினைவுகள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். பின்னர்ப் பாவேந்தரோடு நெருங்கிய தொடர்புடையோர் களிடம் அவரைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து அரும்புகள்