பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 71 நிதியளிக்க அல்லும் பகலும் ஒய்வு ஒழிச்சல் இன்றி ஒரு சல்லிக்காசுப் பயனையும் எதிர்பாராமல் உழைத்தவர் சிலருண்டு; எதிர்த்தவர் பலருண்டு. பொறாமையால் புழுங்கியவர்களும் உண்டு. இவ்வாறு புழுங்கிய தமிழறிஞர்களுள் சாமி. சிதம்பரம் ஒருவர். சாமி. சிதம்பரம் சுயமரியாதை இயக்கக் காலத்தில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் தமிழ் புகட்டிய அறிஞர். என்னுடைய எதிர்பாராத முத்தம் காவியத்தை முதன் முதலில் வெளியிட்டவர் காஞ்சிபுரம் திரு.பொன்னப்பன் அவர்கள். அந்த நூல் அச்சாகிக் கொண்டிருந்தபோது பொன்னப்பன் அதற்கு ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை தரும்படி அண்ணாத்துரையைக் கேட்டார்; அண்ணாத்துரை கொடுக்க மறுத்துவிட்டார். சாமி. சிதம்பரம் தமிழில் அதற்கு ஒரு முன்னுரை வழங்கினார். அதில் என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். நிதியளிப்பு விழா முடிவில் நான் பேசியபோது, "என்னை மக்கள் ஏன் போற்றுகிறார்கள்? பாராட்டுகிறார்கள்? பொற்கிழியளிக்கிறார்கள்? என்னுடைய அஞ்சாமைதான் காரணம். மடமையை ஆதரித்தும், என்னை எதிர்த்தும் பேசுபவர்களைக் கண்டு நான் அஞ்சாமல் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள். தமிழனை, தமிழன் பண்பாட்டினை இகழ்பவர்களை நீங்களும் திட்டுங்கள். நண்பர் சிலரும் நமக்கு உறவுபோல் இருந்து நம் காலைவாரி விடுவார்கள். இதோ எதிரில் அமர்ந்திருக்கும் சாமி. சிதம்பரம் அத்தகைய நண்பர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு. என் நூலுக்கு இவர் கொடுத்த முன்னுரையில் பஃறொடை வெண்பா 14 வரிகளுக்கு மேல் கிடையாது என்றும் பாரதிதாசன் அதற்கு மேல் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லிக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதன் உள்நோக்கம் என்ன? எதையாவது சொல்லி என்னுடைய புகழ் மீது சேற்றை அள்ளிப் பூச வேண்டும் என்பது அவர் நோக்கம். இவரை நாமெல்லாரும் தமிழறிஞர் என்று ஒரு முகமாக ஒத்துக் கொண்டிருக்கிறோம். சமண ராமாயணம் ஒன்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பல ஆயிரம் வரிகள் கொண்ட பஃறொடை வெண்பாவால் ஆகிய நூல். இதைச் சாமி. சிதம்பரம் அறிந்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டார்' என்று அஞ்சாமல் எடுத்துரைத்தேன். அப்போது மேடையில் காஞ்சி பொன்னப்பனும் அமர்ந்திருந்தார். இரா.பி.சேதுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்களும் வந்திருந்தனர். விழாத் தலைமை தாங்கிய ச.சோ. பாரதியார் சாமி. சிதம்பரத்தைப் பார்த்து, ‘என்னையா உம்மைக் கவிஞருக்கு