பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 73 நான் துவக்கவுரையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது உடம்பெல்லாம் பட்டை பட்டையாகத் திருநீறு பூசிய ஒரு தடித்த சைவர் எழுந்து நின்று, பெரியார் இராமாயணத்தை எரிக்க வேண்டுமென்கிறார். ராதா இராமாயணத்தை இழிவுபடுத்திக் கீமாயணம் நடத்துகிறார். இராமன் கடவுள் அல்லனோ? இவ்வாறெல்லாம் செய்வது முறையா? என்று தொடர்பில்லாமல் கேள்விகள் கேட்டார். அவர் கேள்வி கேட்ட முறையிலிருந்தே அவர் கலவரம் செய்வதற்காகவே வந்த வீரசைவர் என்பதை நான் புரிந்து கொண்டேன். எப்போதுமே கருத்துச் சண்டையென்றாலும் கைச்சண்டை யென்றாலும் விரும்பி வரவேற்கும் பண்புடையவன் நான். வாலை மிதித்தால் வரிப்புலி சும்மா இருக்குமா? எனக்குக் கோபம் கொப்பளித்தது. கேள்வி கேட்ட அந்தச் சைவரைப் பார்த்து, நீர் உண்மையான சைவரா? என்று கேட்டேன். ஆமாம்! அதிலென்ன ஐயம்? என்றார் அவர். 'சிவஞான சித்தியார் படித்திருக்கிறீரா? என்று அவரை நான் அடுத்த கேள்வி கேட்டேன். படித்திருக்கிறேன் என்று மழுப்பலோடு கூறினார் சைவர். அருள் நந்தி சிவாச்சாரியார் ஒரு வைணவனை முன்னிலைப்படுத்திக் கூறிய பாடல் தெரியுமா? என்று அடுத்த கேள்வி கேட்டேன். நான் நூலுக்குள் இறங்கியவுடனே அச்சைவருக்கு உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. மாயை கடவுளுக்குக் கிடையாது. மாயையில் சிக்கி, மாயமான் பின்னால் ஒடி, மனைவியை இழந்து தவித்த இராமன் கடவுள் ஆக மாட்டானென்று சிவஞான சித்தியார் தெளிவாகக் கூறுகிறது என்று எடுத்து விளக்கிக் கீழ்கண்ட அப்பாடலையும் சொன்னேன்: மாயமான் தன்னைப் பொய்மான் என அறியாத ரக்கன் மாயையில் அகப்பட் டுத்தன் மனைவியை இழந்தான் தன்னை மாயைக்குக் கர்த்தா என்பை மதிகெட்டங் கவனைக் கொன்று நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பழி நணுகிடாமே இப்பாடலை எடுத்துக்கூறி, இராமன் கடவுளல்லன் என்பதற்குச் சைவர்கள் எல்லாரும் உயர்வாக மதித்துப் போற்றும் சிவஞான