பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 7 மொட்டுகள் மலர்கள் என்ற நூலை 1981ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் சுரதா, வாணிதாசன், சிவப்பிரகாசம், பொன்னடியான், சரசுவதி கண்ணப்பர், வசந்தா தண்டபாணி, மன்னர்மன்னன், கி.ஆ.பெ. விசுவநாதம், மயிலை சிவமுத்து, தியாகராசன், செல்லப்ப ரெட்டியார், திருலோக சீத்தாராம், மணிவேலன், முருகுரத்தினம் முதலானோர் தத்தம் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளனர். 1985ஆம் ஆண்டு குயில் கூவிக் கொண்டிருக்கும் என்ற பிறிதொரு நூலைப் பாவேந்தரைப் பற்றி அறியும் வகையில் வெளியிட்டார். அந்நூலில் ஒவியர் வேணுகோபால சர்மா, இராசகோபாலன், புலவர் மதிவாணன், முருகேசன், வேலுச்சாமி மதுரை தனுஷ்கோடி ராஜு, கவியரசு கண்ணத்ாசன், மஞ்சுளாபாய், பாரதி சுவாமிநாதன், பொன்னையா, ஒளவை. துரைசாமி பிள்ளை, தர்மபுரி செல்லையா, பென்னாகரம் நஞ்சையா முதலானோர்தத்தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அதே ஆண்டில் புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் என்ற மற்றொரு நூலை வெளியிட்டு மகிழ்ந்தார். அந்நூலில் பேராசிரியர் க.அன்பழகன், பன்மொழிப்புலவர் க.அப்பாதுரையார், திருக் குறள் வீ.முனுசாமி, எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கவிஞர் சிற்பி, நா. ஆறுமுகம், மா.அண்ணாத்துரை, சித்தன், சிவக்கண்ணப்பர், தமிழ்ச்செல்வம் முத்தையா, வசந்த குமார், சுந்தரேசன் முதலானோர் தத்தம் கருத்துக்களைப் பொதித்து எழுதியுள்ளனர். இவ்வாறு நான்கு தலைப்புகளில், ஒரே பொருண்மையில் வெளியிடப்பட்ட நூல்களில் பொதிந்துள்ள கருத்துக்களை ஒன்றாக இணைத்து, பாவேந்தர் நூற்றாண்டு விழாவின்போது "பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்' எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. இந்நூல் கவிஞர் முருகுகந்தரத்தின் அரிய முயற்சி, சிப்பியில் முத்து தோன்றுவதற்குப் பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன என்பர் அறிஞர். ஆனால் இந்நூல் உருவாகப் பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ளன. பாவேந்தரைப் பற்றி உயர்ந்த கருத்துக்களை இந்நூலின்கண் முருகுசுந்தரம் பதிவு செய்துள்ளார். "சங்க காலம் தொட்டு இன்றுவரை மொழியையே பாடுபொருளாக வைத்துப் பாட்டிலக்கியம் படைத்து அதில்