பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 83 பொங்கல் விழாக் கொண்டாடுவாராம். அவ்விழாவுக்கு வரு வோர்க்கு ஒவ்வொரு ஆப்பிள்பழம் கையுறையாக வழங்குவாராம். முதன்முதலாக உதகமண்டலத்தில் வளமனை வாங்கிய தமிழறிஞர் இவரே. அந்த நாளில் உந்து வண்டியொன்று சொந்தமாகக் கொண்டிருந்த தமிழாசிரியர் இவர். தமிழாசிரியர்கள் சம்பளத்தை அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்து ரூ.45/-லிருந்து ரூ.75/-ஆக உயர்த்தியவரும் இவரே. ஆவணக்களரி அச்சகம் முதலிய இடங்களில் தமிழாசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்று கூறுவாராம். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பொறியியல், மருத்துவம் போன்ற கல்விகளைக் கற்க அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். செல்வர் வீட்டுப் பிள்ளைகள் சட்டம் படித்து விட்டுத் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வாராம். நமச்சிவாயர் தமிழர் என்றும் நினைவுகூரத்தக்க தமிழறிஞர். பொங்கல் விழாவைத் தோற்றுவித்து விளம்பரப்படுத்திய அவரை நாம் பொங்கல் நாளில் கூட நினைப்பதில்லை. இன்று எனக்குக் கல்லூரி விடுமுறை ஆகையால் பகல் முழுதும் பாவேந்தரோடு கழித்தேன். அன்று மாலை பொன்னம்பலனாரோடு நானும் பொன்னடியும் வெளியில் கிளம்பினோம். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிற்சியாளராக (House surgeon) இருந்த செல்வி, ஞானம் என்ற பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றோம். அந்தப் பெண் பொன்னம்பலனாரின் நெருங்கிய நண்பரின் மகள். செல்லும் வழியில் பொன்னம்பலனார் எங்களை நோக்கி" புரட்சிப் பாவேந்தரை நீங்கள் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் இந்நாட்டின் சொத்து. தனியாக அவரை உந்து வண்டிகளில் ஏறிச்செல்லும்படி அனுப்பாதீர்கள். அவருடன் யாராவது துணையாகச் செல்ல வேண்டும். அவர் குழந்தையைப் போன்றவர்" என்றெல்லாம் கூறிக் கொண்டு வந்தார். 30.4.62 இன்று பாவேந்தர் இல்லத்தில் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தின் செயற்குழுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் வேழ வேந்தன், தமிழகன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 1. பொன்னம்பலனார் பாரதிதாசனாரை எப்போதும் புரட்சிப் பாவேந்தர் என்றே குறிப்பிடுவார். கவிஞர் என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார். கவிஞர் வடசொல் என்பது