பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 85 ஒருமுறை நான் தஞ்சைக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வண்டி மாயவரம் சந்திப்பை அடைந்தது. மாயவரம் சந்திப்பில் வண்டி அரைமணி நேரத்துக்கு மேல் நிற்பது வழக்கம். எனவே சந்திப்புக்கு வெளியே உள்ள ஒரு நல்ல விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கிளம்பினேன். நான் உணவு சாப்பிட்டுவிட்டுப் புகைவண்டிச் சந்திப்புக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இரவு மணி 9 இருக்கும். அப்போது மாரியம்மன் திருவிழா என்று எண்ணுகிறேன். அம்மனைப் பூப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பூவின் அலங்காரமும், மணமும் என்னை மெய்மறக்கச் செய்து விட்டன. போதாதற்கு நாதஸ்வர இசை வேறு. கைப்பையைச் சுமந்த வண்ணம் விடிய விடிய அப்பல்லக்கின் பின்னாலேயே கற்றிக் கொண்டிருந்தேன். பிறகு விடியற்காலம் 5 மணிக்கு வேறு வண்டி பிடித்து ஏறித் தஞ்சை சென்றேன். நான் அப்போது காரைக்காலில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண் டிருந்தேன். மாயவரத்தில் கிட்டப்பா என்ற பூக்கடைக்காரர் எனது நண்பர். அவர் சந்தனமும் விற்பார். நான் மாயவரம் போகும் போதெல்லாம் அக்கடையில் அமர்ந்து பொழுதைக் கழிப்பேன். ஒருமுறை தேனாம்பேட்டைப் பொருட்காட்சியைக் காண்பதற் காக என் நண்பர்களோடு சென்றிருந்தேன். அந்நண்பர்களுள் சக்தி கிருஷ்ணசாமியும் ஒருவர். பொருட்காட்சியில் ஒரு சிற்பக் கடை இருந்தது. எல்லோராச் சிற்பங்களின் மாதிரிகள் அங்கு விலைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், கண்ணாடியைப் பார்த்து ஒரு பெண் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது போல் ஒரு சிற்பம் இருந்தது. அச்சிற்பத்தின் கலையழகு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நான் அப்படியே நின்று கொண்டிருந்தேனோ தெரியாது. என்னோடு வந்த நண்பர்கள் கடைகளையெல்லாம் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அதே இடத்துக்கு வந்தனர். நான் அந்தச் சிற்பக் கடையிலேயே நிற்பதைப் பார்த்துவிட்டு என்னைக் கூட்டிச் சென்றனர். இரத்தக் கண்ணிர் பராசக்தி முதலிய சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளரான திரு.பெருமாள் வீட்டில் நான் அப்போது தங்கியிருந்தேன். வீடு திரும்பிய பிறகும், அச்சிற்பத்தின் கலையழகைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். அதைக் கவனித்த பெருமாள் செட்டியார் ஒர் ஆளைத் தேனாம்பேட்டைப் பொருட்காட்சிக்கு அனுப்பி அச்சிலையை விலை கேட்டு வரச்சொன்னார். ஆனால் அச்சிலையைக் கடைக்காரன் விலைக்குக் கொடுக்க மறுத்துவிட்டான்.”