பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 87 செய்யத் தொடங்கியிருந்ததால், உடற்கட்டும் நன்றாக இருந்தது. பாரதியாரின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னை அறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப் போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். பழமைப் போக்கிலும், செக்கு சுற்றும் கவிதைப் பாணியிலும் ஊறிப் போயிருந்த எனக்கு பாரதியாரின் அஞ்சாமையும், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் காலத்துக்கு ஒவ்வாததை அலட்சியமாக உதறும் துணிச்சலும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தான் நினைத்ததைச் செய்யும் உள்ள உறுதியும் மிகவும் பிடித்தன. உண்மையிலேயே பாரதியாரின் இப்பண்புகள் அப்போது இளைஞனான என்னை மிகவும் வசீகரித்தன. பள்ளி நேரம் போக ஒய்வு நேரங்களில் பாரதியாரோடு இருப்பேன். அரவிந்தர், வ.வெ.சு. அய்யர், பாரதி ஆகியோர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பர். அவர்கள் பேச்சில் அடிபடாத செய்தி எதுவுமில்லை. நான் அருகில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டு எவ்வளவோ தெரிந்து கொண்டேன். பாரதியார் எதைப் பேசினாலும் ஒரு கவிஞனுக்குரிய மிடுக்கோடு தான் பேசுவார். இப்புரட்சிக்காரர்களின் பேச்சைக்கேட்டு இளைஞனான என் உள்ளத்திலும் அப்போது தேசீய உணர்வும், புரட்சிக் கருத்துக்களும் வேர்விடத் தொடங்கின. அந்தச் சமயத்தில் ஒரு வங்காள இளைஞனும் எங்களுடன் இருந்தான். அவன் அரவிந்தரின் தீவிரச் செயல்களால் ஈர்க்கப்பட்டுப் புதுச்சேரி வந்து தங்கியவன். அப்போது வங்காள ஆளுநராக இருந்த ஒரு வெள்ளையரைச் சுட்டுக் கொல்வதற்காக ஒரு துப்பாக்கியை அந்த இளைஞனுக்குக் கொடுத்து உதவினேன். நான் இளமைத் துடிப்பில் அப்போது செய்த பல துணிச்சலான செயல்களைக் குடும்ப விளக்கின் விருந்தோம்பல்” பகுதியில் ஒரு முதியவர் கூறுவதுபோல் வெளிப்படுத்தியிருக்கிறேன். என் இளமைத் துடிப்பையும், துணிச்சலையும் ஒருமுகப்படுத்திக் கவிதைத் துறையில் திருப்பிவிட்டவர் பாரதியார்தான். ஒருநாள் என் வயதுக்கேற்ற நண்பர் சிலருடன் அரவிந்தர் தங்கியிருந்த மாடி வீட்டின் கைப்பிடி சுவரின் மீது அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாரதியாரும், அரவிந்தரும் வேறு சில நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்தது எனக்குத் தெரியாது. என்னையும் என்னோடு புகைபிடித்துக் கொண்டிருந்த என் சகாக்களையும் பார்த்த அரவிந்தருக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கும்போல் இருக்கிறது. என்னைப்