பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - - 89 யடைந்தார்கள் என்பது அவர்கள் முகங்களிலிருந்து தென்பட்டது. அவர்கள் என்னை வயது முதிர்ந்த ஒரு சிவனடியார் கோலத்தில் கற்பனை செய்து கொண்டு வந்திருக்க வேண்டும். என் தோற்றமும் செயலும் அவர்கள் எண்ணி வந்ததற்கு மாறாக இருக்க வேண்டும். கீர்த்திக்கேற்ற மூர்த்தியாக நான் அவர்களுக்குத் தென்படவில்லை. எதுவும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டனர். என்னுடைய பதினாறாவது வயதில் நான் இன்பச் சுவை பொருந்திய லாவணிப்பாட்டு ஒன்று எழுதியிருந்தேன். அது ஒரு காதலன் தன் காதலியை அங்கம் அங்கமாக வருணித்துப் பாடுவதுபோல் அமைந்தது. கொஞ்சம் வண்டை வண்டையா இருக்கும். ஒரு நாள் பாரதியாரின் வீட்டு மாடிமேல் என் நண்பர்கள் சிலரோடு இருந்தேன். எல்லாரும் விடைப் பசங்க. என் லாவணியை அவர்களிடம் இசையோடு பாடிக் காட்டிக் கொண்டிருந்தேன். அவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பாடல் முழுதும் இப்போது எனக்கு நினைவில் இல்லை. நினைவில் உள்ள சில வரிகளை மட்டும் பாடுகிறேன். (கவிஞர் பாடினார்) நீலமலர் தன்னையும் கோலக்கெண்டைமீனையும் நிகர்க்குதேஇவள் நேத்ரம் என்ன காத்ரம்? நான்எம் மாத்ரம்?-இந்த வாலைப்பெண்ணைப் புணர வேண்டுமே கொக்கோக சாத்ரம் ஏக காலத்திலிரு சூரியன் புறப்பட்டா எப்படித் தானிருக்கும் ஒது? அதுபோல் காதில் இருப்ப தேது? ஒப்பாலாயிரம் பெறும் கொப்பு முதல் நகைகள் இழையாலாயிரம் பெறும் தாவணி மற்றும் பூவணி-கனக சுப்பு ரத்னம் சொன்னான் அடியா லாயிரம்பெறும் லாவணி. 1. லாவணி என்பது நாட்டுப்புறங்களில் டேப்' என்னும் தட்டையை ஒலித்துக் கொண்டு பாடப்படும் ஒருவகைப் பாடல். கும்மியைப்போல் இருக்கும். இன்றும் காமன் பண்டிகைகளில் லாவணி பாடுகிறார்கள்.