பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 93 அதைச் செரிக்க வைக்கும் உடல்வளம் அவருக்கு 72 ஆவது வயதிலும் இருந்தது வியப்பிற்குரியது. பாவேந்தர் யார் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும், சுவையாகச் சமைத்துப் போட்ட அவ்வீட்டுப் பெண்களைப் பாராட்டாமல் வருவதில்லை. அதுவும் இன்ன பொருள் இப்படிச் சுவையாக இருந்தது என்று விமர்சனம் செய்யாமல் வரமாட்டார். இந்தச் செய்தியைப் பாவேந்தரோடு தொடர்பு கொண்ட பல நண்பர்களின் வீட்டில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டில் இருக்கும் போது லுங்கியும் முண்டா பனியனும் போட்டிருப்பார். வெளியில் கிளம்பும்போது வேட்டியும் ஸ்லாக் சர்ட்டும் அணிந்து கொள்வார். கூட்டங்களுக்குச் செல்லும்போது வெள்ளை மல்ஜிப்பாவும் துண்டும் அணிந்து செல்வார். முக்கியமான விழாக்களுக்குச் செல்லும்போது பூப்போட்ட காஷ்மீர் வுல்லன் அங்கவஸ்திரத்தை மூலைவாக்கில் மடித்துக் கழுத்தின் இரண்டு பக்கமும் தொங்கும்படி போட்டுக் கொள்வார். இந்தக் கோலம் இவருக்கு மிகவும் பிடித்த திருக்கோலம். தலைக்குப் பூசிக்கொள்வதற்காக இவருக்குப் பெங்களூரிலிருந்து ஒருவர் தாழம்பூத் தைலம் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார். பாவேந்தர் நண்பர்களிடத்தில் குழந்தையைப் போல் ஒட்டுறவோடு பழகுவார். அதே சமயம் குழந்தையைப் போல் எந்த நேரமும் அவர் கோபித்துக் கொள்ளுவார். பாவேந்தரைப் பார்க்க வந்தவர்களும், அவரிடம் முன்னுரை - வாழ்த்துப்பா வேண்டி வந்தவர்களும் பல வேறுபட்ட அனுபவங்களை என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவையெல்லாம் பாவேந்தர் அப்போதிருந்த மனநிலையைப் பொறுத்தது. அவருக்கு யாரையாவது பிடித்துவிட்டால், அவர்மீது அளவு கடந்த பரிவைக்காட்டித் திக்குமுக்காடச் செய்வது அவர் வழக்கம். நான் அவரோடு தொடர்பு கொண்டிருந்த மூன்றாண்டுகளில் ஒரே ஒருமுறை தான் என்னிடம் கோபித்துக்' கொண்டார். பாவேந்தரிடம் அடிக்கடி காணப்படும் ஒரு பழக்கமுண்டு. யாராவது வியப்பிற்குரியதாக ஒரு செய்தியை அவரிடம் கூறினால் உடனே தமது வலக்கையின் ஆட்காட்டி விரலை மூக்கின் நுனியின் மேல் கொண்டு போய் வைத்துக் கொள்வார். உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்களிடம் பேசும்போது தமது உள்ளங்கையை மேலிருக்கும் படி திருப்பிக் கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டித் 1. இராசிபுரம் கவிஞர் மாநாட்டுக்கு வரும்போது. இந்நிகழ்ச்சி பற்றிப் பின்னால் திப்பிட்டிருக்கிறேன்.