பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

unФафёй-&sudossvecёвұрғыһ 97 படிக்காத அப்பட்டுவிற்குப் பாவேந்தர் என்ற சொல் வாயில் நுழையாது. பாவேந்து கொடுத்து! மகராசன்! நல்லா இருக்கணும்! என்று கண்ணில் நீர் ததும்ப அடிக்கடி அவள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இவர் இரக்கக் குணத்தையும் தாராள நோக்கையும் பயன்படுத்திக் கொண்டு சிலபேர் இவரிடம் நிரந்தர விருந்தாளிகளாகத் தங்கி இருப்பதுண்டு. அவர் சென்னையில் வாழ்ந்தபோது வாட்ட சாட்டமான ஓர் ஆள் அவரைத் தேடி வந்தார். உயரமான தோற்றமும், மூக்குக் கண்ணாடியோடும் எடுப்பான முகமும் கொண்ட அவர் பெரிய வாய்ச்சாலக்காரர். சரளமாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் வல்லவர். பாவேந்தர் கவிதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும், உலக அரங்கில் அவர் புகழைப் பரப்ப வேண்டுமென்றும் சரமாரியாகப் பேசினார். தம்மை அனுமதித்தால் உடனிருந்து அப்பணிகளைச் செய்யத் தயார் என்றும் குறிப்பிட்டார். பாவேந்தர் யாரையும் எளிதில் நம்பிவிடும் பழக்கமுடையவர். மாற்றி அணிய வேறு உடைகூட இல்லாத நிலையில் வந்த அவரைப் பாவேந்தர் தம் இல்லத்தில் வைத்துக் கொண்டு உணவும் உடையும் கொடுத்துப் பல திங்கள்கள் ஆதரித்து வந்தார். எங்கு போனாலும் அவரைத் தம்முடைய நேர்முகச் செயலாளர் (PA) என்று சொல்லி உடன் அழைத்துச் செல்லுவார். சில சமயம் அவர் காக்கி உடையணிந்து பாவேந்தருடைய மெய்க்காப்பாளர் (Bodygaபrd) போலவும் செல்வதுண்டு. காலப்போக்கில் அவர் ஒரு வெற்றாள் என்பதை அறிந்து கொண்ட பாவேந்தர் அவரை வெளியேற்றிவிட்டார். பத்திரிகைத்துறை என்பது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கே கைவந்த துறையாக நீண்ட காலம் இருந்து வந்ததை யாவரும் அறிவோம். ஒரு பத்திரிகையைத் துவக்கி வளர்த்து நிலைபெறச் செய்ய வேண்டுமானால் முதலில் அதை நடத்துபவனே விளம்பரமான ஒரு சிறந்த எழுத்தாளனாக இருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு சொந்த அச்சகமும் முதலீடும் வேண்டும். மூன்றாவதாகப் பத்திரிகையை மக்கள் நடுவில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யும் வாணிபத் தந்திரமும் வேண்டும். திராவிட இயக்கம் வளர்ச்சி நிலையில் இருந்தபோது (கி.பி. 1940 முதல் 1960 வரை) நிறைய நாளிதழ்களும், தாளிகைகளும் வெளி வந்தன. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு பத்திரிகையைத் தமக்கென்று சொந்தமாகத் துவக்கி இழப்பையும் பொருட் படுத்தாமல் நடத்தி வந்தனர். அவற்றுள் விடுதலை, குடியரசு,