பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#00 நினைவில் நின்றவை நீக்கத்தை வயது முதிர்ந்து கண்ணிழந்த நிலையிலே எழுதி முடித்தார். பாவேந்தர் நிலை எப்படி? வயது ஏற ஏற ஒரு கவிஞனது படைப்பாற்றல் குறைந்து கொண்டு வருவதாகக் கூறுகிறார்களே! பாவேந்தரிடத்தில் அக்கூற்றுப் பொய்யாகிறது. அவருடைய உயர்ந்த படைப்புகள் (Master-Pieces) எல்லாமே நாற்பது வயதுக்கு மேல் எழுதப்பட்டவை. சாகும் வரையிலும் அவர் உணர்வுகள் மிகக் கூர்மையாக இருந்தன. பெரியார், இராஜாஜி ஆகியோரின் மூளையைப்போல் இவர் மூளையும் சாகும்வரை ஓர் சிந்தனைப் பட்டறை. உயிர் ஒயும் வரையில் பாவேந்தர் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தார். தமது முதிர்ந்த வயதில் எவ்வளவு இளமையுணர்ச்சி பொங்க அதே சமயம் நுட்பத்தோடு கவிதை எழுதியுள்ளார் என்பதைப் படித்துப் பாருங்கள்: இளமையின் விளக்கம்: சாவெப் படி இருக்கும் சாற்றென்றாள். நாம்பிரிந்தால் நோவெப் படிஇருக்கும் நோக்கென்றான்-மேவுதமிழ் எவ்வாறிணிக்கும் என்றாள். எட்டிஇழுத் தனைத்தே இவ்வாறிணிக்கும் என்றான் சேய்' பாவேந்தர் சாதாத்துண்டு போட்டவரையில் எழுதிய கவிதைகள் நன்றாக இருந்தன. சரிகைத்துண்டு போட்ட பிறகு எழுதிய கவிதைகள் நன்றாக இல்லை என்று ஒரு நண்பர் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு. நல்ல கவிதை வரவேண்டுமானால் வறுமை வேண்டும். பாரதிதாசனிடத்தில் நிறையப் பணத்தைக் கொடுத்து அவரைப் பாடவிடாமல் செய்கிறீர்கள் என்று பாவேந்தருக்கு நிதியளித்த காலத்தில் பெரியார் சில நண்பர்களிடத்தில் குறிப்பிட்டாராம். வாழ்க்கை வசதியும் வயது முதிர்ச்சியும் நல்ல கவிதைக்கு இடையூறுகள் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. வயது முதிர்ச்சியால் அறிவு நுட்பமாகிறது; படைப்பாற்றலும் குறைவதில்லை. ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் பொதுவாக எல்லாருக்கும் வாழ்க்கைச் சிக்கல்கள் அதிகமாகின்றன. மனச்சுமை அழுத்துகிறது. ஊன்றிச் சிந்திக்க (Concentration of mind) வாய்ப்புக் குறைகிறது. ஆனால் பாவேந்தர் சிக்கல்களுக்கு நடுவிலும் சிந்தித்தார். - பெரும்பாலும் தமிழ்ப்புலவர்களில் சிலர் இயற்றமிழோடு நின்று விடுவர்; சிலருக்கு இசைத்தமிழில் மட்டுமே ஈடுபாடு இருக்கும்; 1. 29.12.59 குயிலில் எழுதியது.