பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவில் நின்றவை நான் சென்னையில் கல்லூரி மாணவனுக இருந்த ஆண்டு கி. பி. 1961 - 62. அப்போது பாவேந்தருக்கு 72ஆம் வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வயதிலும் அவர் நல்ல உடல் நலத்தோடு இருந்தார்; சுறுசுறுப்போடும் இயங்கிக்கொண்டிருந்தார். அவர் தோற்றம் பார்த்த வுடன் உள்ளத்தில் நிலைத்துவிடும்.கம்பீரமான தோற்றம். அவர் உயரம் 5 10" இருக்கும். கொஞ்சம் முற்றிய மாந் தளிர் மேனி, உருண்டையான பெரிய முகம். மிரட்டும் பார்வை. அடியகன்ற அவருடைய பெரிய மூக்கின்மீது பழைய மோஸ்தர் வட்ட ஃப்ரேம் போட்ட கண்ணுடி எ போதும் உட்கார்ந்திருக்கும். சிந்தனையாளர்களு உரிய பரந்த நெற்றிமேடும் தலைமயிரும் சந்திக்குமி