பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/95 கின்றன. சிங்கம் நடக்கும்போது தன் தலையை இரண்டு பக்கமும் கம்பீரமாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்கும். பாவேந்தர் எதிரில் இருப்பவர்களிடம் எதைப் பற்றியேனும் ஆழ்ந்து பேசும்போது தம் தலையை இரண்டு பக்கமும் திருப்பிப் பார்த்துக் கொண்டே பேசுவார். இந்த அம்மையாரும் அப்படியே பேசுகிருர். பாவேந்தர் சென்னையில் வாழ்ந்தபோது, அவருடைய பொருள் வருவாய் எப்படியிருந்தாலும் மிகவும் வசதியோடு தான் வாழ்ந்தார். குடியிருக்க எல்லா வசதிகளோடுங் கூடிய வளமனை. கொஞ்சநாள் சொந்தமாகக் கார் கூட வைத்திருந்தார். எடுபிடிக்கு ஆட்களும் உண்டு. சத்திரம் போல நாள் தோறும் நான்கைந்து பேருக்காவது வீட்டில் சமாராதனை நடந்து கொண்டிருக்கும். நிலையான விருந் தாளிகளாக இரண்டுபேர் எப்போதும் இருப்பார்கள். நான் சென்னையில் இருந்தபோது பாவேந்தரின் மனைவி யார் பழனியம்மாள் பெரும்பாலும் புதுவையிலேயே இருந் தாள்கள். தாயாரம்மாள் என்ற சமையல்காரியும், அவ ருக்கு ஒத்துழைக்க பட்டு என்ற வேலைக்காரியும் வீட்டில் இருந்தனர். தாயாரம் மாளுக்கு வயது ஐம்பதிருக்கும்; கவையாகச் சமைப்பார். பாவேந்தரைத் தேடி யார் எந்த நேரத்தில் வந்தாலும், அவர் என்ன சமைக்கச் சொல்கி ருரோ அதைச் சமைக்க வேண்டும். நாள்தோறும் புலால் உணவில்லாமல் அவரால் இருக்க முடியாது. குறைந்தது மீனும் கத்தரிக்காயுமாவது குழம்பு வைக்க வேண்டும். இருல் (Prawn) தொக்கு அடிக்கடி செய்யச் சொல்லி விரும்பிச் சாப்பிடுவார். அவருக்குப் பருப்புரசம் பிடிக் காது. நிறைய மிளகை உடைத்துப்போட்டுக் கறிவேப்பிலே மிதக்கக் காரமாக வைக்கும் மிளகுர சம்தான் பிடிக்கும். மூன்று நேரமும் புலால் உணவே உண்டாலும் அதைச் செரிக்க வைக்கும் உடல்வளம் அவருக்கு 72ஆவது வய திலும் இருந்தது வியப்பிற்குரியது.