பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/97 பாவேந்தரிடம் அடிக்கடி காணப்படும் ஒரு பழக்சமுண்டு. யாராவது வியப்பிற்குரியதாக ஒரு செய்தியை அவரிடம் கூறினால் உடனே தமது வலக்கையின் ஆட் காட்டி விரலை மூக்கின் நுனியின் மேல் கொண்டு போய் வைத்துக் கொள் வார். உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்களிடம் பேகம்போது தமது உள்ளங்கையை மேலிருக்கும்படி திருப்பிக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டித் தமக்கு மு ன்ன லிருக் கும் மேசை விளிம்பில் வைத்துக் கொண்டு பேசுவார். தாகூரிடம் ஒரு விநோதமான பழக்கமுண்டு, அவருடைய கையெழுத்துப் படியில் மைசிந்தி விட்டால், அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டு விட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அவரைப் போலவே கையெழுத்துப் படியில் மைசிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு. அவ்வாறு அவர் மாற் றிய கையெழுத்துப்படி யொன்று என்னிடம் இருக்கிறது. பாவேந்தரின் ஏகாந்தத்தை யாராவது தி டீ .ெ ர ன் று சென்று கலைத்தாலோ, அவரை அவைசியமாகச் சீண்டி விட்டாலோ அவருக்குக் குபிரென்று கோபம் வரும். அப் படி இரண்டொரு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். சென்னை இராமன் தெருவில் அவர் குடியிருந்த பங்களா வின் உரிமையாளர் ஒரு ரெட்டியார்; வசதியானவர்; பாவேந்தரின் மீது மிக்க மதிப்புடையவர். ஒரு நாள் அதி காலையில் ஆழ்ந்த சிந்தனையோடு பாவேந்தர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அன்று சமையற்காரத் தாயா ரம்மாள் ஊரிலில்லை. பாவேந்தர் அதிகாலையில் காஃபி அருந்தும் வழக்கத்தை நினைவில் கொண்டு வீட்டுக்கார ரெட்டியார் கையில் சூடான காஃபியோடு பாவேந்தரின் அறையில் நுழைந்தார். அவரைப் பார்த்த பாவேந்த ருக்குச் சுரீரென்று கோபம் வந்துவிட்டது. 'என்னைக் கேட்காமல் உங்களை யாரிங்கே காஃபி கொண்டு வரச் fsnsns: பிற்சேர்க்கை (பாவேந்தர் கடத்திய இலக்கணப் பாடம்)