பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/102 முகச் செயலாளர் (P.A) என்று சொல்லி உடன் அழைத் துச் செல்லுவார். சில சமயம் அவர் காக்கி உடைய ணிந்து பாவேந்தருடைய மெய்க்காப்பாளர் (Body gaurd) போலவும் செல்வதுண்டு. காலப் போக்கில் அவர் ஒரு 'வெற்ருள்' என்பதை அறிந்துகொண்ட பாவேந்தர் அவரை வெளியேற்றிவிட்டார். - பத்திரிகைத்துறை என்பது தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கே கைவந்த துறையாக நீண்ட காலம் இருந்து வந்ததை யாவரும் அறிவோம். ஒரு பத்திரிகையைத் துவக்கி, வளர்த்து நிலை பெறச் செய்ய வேண்டுமானல் முதலில் அதை நடத்து பவனே விளம்பரமான ஒரு சிறந்த எழுத்தாளகை இருக்க வேண்டும். இரண்டாவதாக ஒரு சொந்த அச்சகமும் முத லீடும் வேண்டும், மூன்ருவதாகப் பத்திரிகையை மக்கள் நடுவில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யும் வாணிபத் தத்திரமும் வேண்டும். திராவிட இயக்கம் வளர்ச்சி நிலையில் இருந்தபோது (கி.பி.1940முதல் 1950வரை) நிறையநாளிதழ்களும், தாளி கைகளும் வெளிவந்தன. ஒவ்வொரு த லை வ ரு ம் ஒவ்வொரு பத்திரிகையைத் தமக்கென்று சொந்த மாகத் துவக்கி இ ழ ப் ைப யு ம் பொருட்படுத்தாமல் நடத்தி வந்தனர். அவற்றுள் விடுதலை, குடியரசு, திராவிடநாடு, முரசொலி, பொன்னி, மன்றம், திரா விடன், தென்றல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்ணுவும், கலைஞரும், கண்ணதாசனும் பரபரப்போடு இப்பத்திரிகைகளை நடத்திவந்தனர். எல்லா இதழ்களும் பாவேந்தர் படைப்பை விரும்பி வெளியிட்டன. 1942-43 இல் திராவிட நாட்டில் பாவேந்தர் பாட்டு தொடர்ந்து வரும். அவர் பாடல் எழுதாத வாரத்தில் அவருடைய பழையபாடலைத் தேடி எடுத்துத் திராவிடநாடு வெளி யிடும்.