பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/108 பெற்றன. பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியமும் நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாரும் நாடகக் குழுவின் பொறுப்பாளர்களாக இருந்தனர். சென்னையில் இருந்த போது தமது 70 ஆம் வயதிலும் தேர்தல் பிரசார நாடகத் துக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். இளமையிலிருந்தே இவரிடத்தில் பொதிந்திருந்த நாடக ஈடுபாடே இவரைத் திரைப்படத் துறைக்கு இழுத்துச் சென்றது. முதன்முதலாகப் பாவேந்தர் படத்துறையில் துழைந்தது 1938 ஆம் ஆண்டு. சேலம் மோகினி பிக்சர் சார் குழலிசை மாமன்னர் திருவாவடுதுறை இராசரத் தினத்தைக் கதாநாயகனுகப் போட்டுக் 'கவிகாளமேகம்’ என்ற படத்தை எடுத்தனர். அதற்குத் திரைக்கதை, வச னம், பாடல் எல்லாமே பாவேந்தர் தாம் எழுதினர். ஏறக் குறைய இதே காலத்தில்தான் தம் நண்பர் வ.ரா. வின் 'இராமானுசர்' என்ற படத்துக்குப் பாடல்கள் எழுதவும் ஒப்புக் கொண்டார். 'பாலாமணி அல்லது பக்காத் திரு உன்' என்ற படத்திற்கும் ஒரு பகுதி வசனம் எழுதினர். இத்துடன் இவர் படத்துறை வாழ்க்கையின் முதற்கட்டம் முற்றுப் பெற்றது. - பிறகு கி.பி. 1947 முதல் 1953 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத் துறையில் ப எ வே ந் த ர் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார். அபூர்வ சிந்தாமணி, சுபத்ரா, சுலோச,ை பொன்மூடி, வளையாபதி, ஆகிய ஐந்து படங் களும் ஆண்டுக்கொன்ருக சேலம் மாடர்ன் தியேட்டர்சா ரால் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இந்த நான்கிற். கும் பாவேந்தர் திரைக்கதை வசனம் எழுதினர்; சில பாடல்களும் எழுதினர். அதன் பிறகு திரைப்படத் துறை யிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அவருடைய இசைப் பாடல்கள் அவ்வப்போது சில திரைப்படங்களில் எடுத்தா ளப்பட்டன. - பிறகு 1960 ஆம் ஆண்டு திரைப்படத் துறை இவரை மீண்டும் பற்றிக் கொண்டது. புதுவையிலிருந்து இவர்