பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூருகுசுந்தரம்/115 லையில் பூக்கும் பூ. அந்தச் சொல்லை அதனுள் அடங்கி யிருக்கும் கருத்துச் செறிவும் தினைப்பண்பும் புலப்படும் படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது முடியாது என்று கருதி யிருக்கலாம். மேலும் இவ்வரிகளை மொழிபெயர்ப்பவர் கள் பல செய்திகளை உணர்த்தியாக வேண்டும். கொன்றை சரஞ்சரமாக பூக்கும் தன்மையுடையது என்பதையும், படுக்கையறைக் கட்டில் மீது மலர்ப்பந்தல் போடுவது தமிழ்நாட்டு வழக்கம் என்பதையும், கட்டில் கால்களை அரியனை போல் நான்கு பக்கமும் சிங்கந்தாங்கும்படி கலை யழகோடு அமைத்தல் தமிழர் இயல்பு என்பதையும் மொழி பெயர்ப்பில் உணர்த்தியாக வேண்டும். சிரமந்தானே? தமிழ் இலக்கியங்களைப் பிறமொழியில் பெயர்ப்பது என் னும் பணி தனிப்பட்ட ஒருவரின் ஆர்வத்தாலும் ஊக்கத் தாலும் நிறைவேறக் கூடியதா? இஃது ஒரு நாட்டின் அரசரங்கம் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய வேலை: பாவேந்தர் நிலை இரண்டுங்கெட்டான் நிலை. பாவேந்தர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே, த மி ழ க அரசு புதுவை அரசாங்கம் இப்பணியை மேற்கொண்டு செய்யட்டுமே எனக்காத்திருக்கிறது. புதுவை அரசோ, "தமிழக அரசு எப்படியும் செய்துவிடும்; நாம் ஏன் இதில் தலையிட வேண்டும்' என்று நினைக்கிறது போல் இருக் கிறது. பாவேந்தர் ஒரு தமிழர்; அவர் படைப்புக்களை மொழிபெயர்ப்பது தமிழர் கடமை’ என்று யாரும் நினைக் கக் காணுேம். நான் சேலம் திரும்பிய பிறகு எப்போது சென்னை சென்ரு லும் பாவேந்தரைச் சென்று பார்த்துப்பேசிவிட்டு வருவது என்பது என் வழக்கமாகி விட்டது. தமது பொருளாதாரத் தட்டுப் பாட்டின் காரணமாகப் பாவேந்தர் தாம் குடி யிருந்த இராமன் தெரு பங்களாவின் முன்பகுதியைக் காலி செய்து விட்டு ரூ.70/- வாடகையில் பின்கட்டு (Out House) க்குக் குடிபெயர்ந்து போய் விட்டார். நான் ஒரு முறை சென்னை சென்றிருந்தபோது பாவேந்தரும் நானும் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றிருந்தோம்.