பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/116 அப்போது என் தம்பி முருகரத்தனம் மாநிலக் கல்லூரி யில் தமிழ் விரிவுரையாளனுகப் பணியாற்றிக் கொண்டி ருந்தான். அவன் அப்போது கடற்கரையைப் பார்த்தபடி அமைந்திருந்த பல்கலைக் கழக நிறைகலை மாணவர் விடு £uosi (University P.G. Students' Hostel) &#15uoqbā தான். அவனைப் பார்க்கலாம் என்று நானும் பாவேந்தரும் கிளம்பினுேம். நாங்கள் கிளம்பும்போது பாவேந்தருக்கு அறிமுகமான ஒரு பார்ப்பன நண்பரும் எங்களுடன் சேர்ந்துகொண்டார். அன்று விடுதியில் ஏதோ விருந்து. பாவேந்தர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடுபவர் என் பதை அறிந்து வைத்திருந்த என் தம்பி அவரை விருந் துக்கு அழைத்தான். 'என்ன item?' என்ருர் பாவேந்தர். 'வான்கோழி பிரியாணி என்று கூறினன் என் தம்பி. "அப்படியா? சரி போவோம்!' என்று எழுந்தார். பாவேந்தர் அருகில் அமர்ந்திருந்த பார்ப்பன நண்பர் "அப்ப...நா...வர்சங்க என்று சொல்லிக் கைகூப்பி விட்டு அவசரமாக நகர்ந்தார். 'நீ...சாப்பிடலயா? வான்கோழி பிரியாணி... எளிதா கிடைக்காத item என்ருர் பாவேந்தர். - - 'வேண்டாங்கய்யா... நா வர்ர...' என்ருர் அந்த நண்பர். ஏ? கோழி கொத்திப்புடுமுன்னு பயப்படறியா? என்று கேட்டுவிட்டு உரக்கச் சிரித்தார். பார்ப்பன நண்பர் முகத் தில் அசடு வழிந்தது. இதை இரவில் நான் தூங்கும்போது நினைத்தாலும் குயீரென்று சிரிப்பு வரும். மறுமுறை நான் சென்னை சென்றிருந்தபோது மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனுக’ப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த என் இளைய தம்பியின் வேலை தொடர்பாகப் பாவேந்தரைச் சென்று பார்த்தேன். மந்திரி