பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/117 மஜீத்தைத் தாம் இரண்டுமுறை இதுபற்றிச் சென்று பார்த்ததாகச் சொன்னர், 'நீ எதற்காக வீண் செலவு செய்து கொண்டு வந்தாய்? கடிதம் போட்டால் போதாதா? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ!' என்று சொன் ர்ை. ஆளுல் மந்திரி மஜீத்தை அவரால் மீண்டும் பார்க்க முடியவில்லை. கவிஞர் மாநில மாநாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1963ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 9, 10 தேதிகளில் நடைபெற இருந்தது. இராசிபுரம் திருக்குறள் ஆட்சி மன்றத்தைச் சேர்ந்த திருவாளர்கள் கி. அரங்கசாமி, செ. அங்கமுத்து ஆகிய இருவரும் அம் மாநாட்டை முன் னின்று நடத்தினர். இச் செய்தியை முன்கூட்டி அறிந்த நான் பாவேந்தருக்கு இதுபற்றிக் கடிதம் எழுதிக் கேட் டேன். அவரிடமிருந்து கீழ்க்கண்ட கடிதம் வந்தது. திரு. புலவர் அவர்களே, அஞ்சல் கிடைத்தது. கான் 8-11-63 கால எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் புறப்பட்டு வருகின்றேன். என்னை, பஸ் சந்திப்பு நிலையத்தில் சந்திக்க வேண்டு கிறேன். - பிற நேரில் பாரதிதாசன் சென்னையிலிருந்து அரசாங்கப் பேருந்து வண்டியில் பக லெல்லாம் குலுங்கிப் பயணம் செய்து கொண்டு வரப் போவதாகப் பாவேந்தர் எழுதியிருந்த கடிதச்செய்தியைப் படித்ததும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவ் வளவு நீண்ட தொலைவு பேருந்தில் பகல் நேரத்தில் பய ணம் செய்வது அப்போதிருந்த அவர் உடல் நிலைக்கு ஏற்றதன்று என்று கருதினேன். எனவே இரவு நேரத்தில் படுக்கை வசதியோடு புகைவண்டியில் வரும்படி அவருக்கு வற்புறுத்தி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய கடிதத் தைக் கண்டதும் அவருக்குச் சுரீரென்று கோபம் வந்து