பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/121 யிருந்தார். பாவேந்தரின் ஆவேசத்துக்குச் .ெ சா ல் ல வேண்டுமா! மாநாடு நடந்த இரண்டு நாட்களும், நாங்கள் பாவேந்த ரோடு இராசிபுரம் அரசினர். பயணியர் விடுதியில் தங்கி யிருந்தோம். பாவேந்தரும் புலவர் குழந்தையும், புலவர் இராமநாதனும் ஓயாமல் தமிழைப் பற்றிப் பேசியும் வாதிட்டுக் கொண்டும் இருந்தனர். எங்களுக்கெல்லாம் அவர்கள் பேச்சு சீரணிக்க முடியாத பெரிய விருத்தாக இருந்தது. பாவேந்தரும் புலவர் குழந்தையும் தமிழ்ப் புலவர் உலகில் முரட்டுத் தனத்துக்குப் பேர் போனவர் கள். இந்த இரண்டு பேருமே மதயானை போல் சில கருத் தில் மோதிக் கொள்வார்கள். நாங்கள் அச்சத்தோடும் வியப்போடும் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்போம். பாவேந்தர் க ைட சி ய ர க 'அது அப்படித்தா!' என்று அடித்து முழங்குவார், புலவர் குழந்தை பேசாமல் இருந்து விடுவார். பொதுவாக இது போன்ற இ ல க் கி ய மாநாடுகளுக்கு வாழ்த்துச் செய்திகள் தாம் வருவது வழக்கம். 9-11-63 திங்கட்கிழமை முற்பகல் நாங்கள் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தபோது 'உயர்திருவாளர் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள், மே|பா ‘கவிஞர் மாநில மாநாடு' என்று முகவரி போட்டு ஓர் அஞ்சல் உறை வ ந் த து. அதில் நான்கு முழுப்பக்க அளவில் ஓர் வசைக் கவிதை இருந்தது. அஞ்சல் உறையின் மறுபக்கத்தில் ம இலெ. தங்கப்பா மே|பா ‘தென்மொழி', திருப்பாதிரிப்புலியூர் கடலூர் பு. ந. என்று அவ்வசைக் கவிதைக்குரியாரின் முகவரி எழுதப்பட்டிருந்தது. அவர் யாரையும் பெயர் சுட்டாமல் பொதுவாக மாநாட்டையும், மாநாட்டில் கலந்து கொண்ட எல்லாக் கவிஞரையும் தமிழுணர்வு அற்றவர்களென்று திட்டித் தீர்த்திருந்தார். 'பாவலர் மாநாடு' என்று போடாமல் 'கவிஞர் மாநாடு' என்று போட்டிருந்ததே அவ்வசைப் பாடலுக்குரிய அடிப்படைக்