பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/123 நடைபெற்றது. அ த ன் அழைப்பிதழ் ஒன்று எனது சேலம் முகவரிக்கு வந்தது. இந்த 74 ஆவது பிறந்த நாளை நடத்த ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டிருந்தது. விழாக்குழுவின் தலைவராகத் திருவாளர் N. பாபு ஜர்ைத் தனம்,B.A.,B (Com., (கோல்டன் ஸ்டுடியோ உடையவர்) அவர்களது பெயர் போடப்பட்டிருந்தது. திருவாளர்கள் சிலம்புச் செல்வர் மா.பொ.சி, நடிகவேள் M. R. ராதா, குணச்சித்திர நடிகர் S.V. சகஸ்ரநாமம், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், நாரண, துரைக்கண்ணன், கவிஞர் கண்ணதாசன், திருமதி அனுசூயா தேவி ஆகி யோர் அவ்விழாவில் வாழ்த்துரை வ ழ ங் கு வ ர் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அவ்விழாக் குழுவில் சினிமா ஆர்ட் டைரக்டர் அம்மையப்பன், கவிஞர் தஞ்சை வாணன், திரைப்பட நடிகர்கள் 0.A.K.தேவர், R. பக்கிரி சாமி, புதுவைத் தமிழழகன், எண்ணுரர் கொத்தாரி உர உற்பத்திச்சாலை பொது மேலாளர் S. நல்லபெருமாள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பாவேந்தரின் 'பாரதப் பாசறை' என்ற நாடகம் வழக்கறிஞர் W.P. இராமன் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனல் இந்த விழா எந்த அளவு வெற்றிகரமாக நடைபெற்றது என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு பாவேந்தரின் 75 ஆவது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குச் சிலர் முயற்சி எடுத்துக் கொண்டனர். இறங்கு துறையிலேயே நீத்தானது போல் விழாக்குழு அமைப்பதிலேயே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விழா முயற்சி உடைந்தது. இவ்வமைப்புக் குழுச்சண்டையில் என் தம்பி முருகரத்தனத்தின் பெயரும் அடிபட்டது. சென்னை சென்று இதைப் பற்றி அறிய வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத் தில் பாவேந்தரிடமிருந்தே இதுபற்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நாள் குறிப்பிடவில்லை. கடிதம் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் என்னை வந்தடைந்தது. அக் கடிதம் முகவரி அச்சிட்ட அவர் கடிதத்தாளில் (letterpad)