பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/124 எழுதப்பட்டிருந்தது. ஒவியர் சர்மா தீட்டிய பாவேந்தரின் வண்ணப்படம் அத்தாளின் உச்சியில் மூன்று வண்ணத் தில் அழகாக அச்சிடப்பட்டிருந்தது. இதுதான் பாவேந் தரிடமிருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். பாவேந்தர் பாரதிதாசன் 10, இராமன்தெரு, தியாகராயநகர், சென்னை-17 திரு கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள், ஆசிரியர், சேலம் கல்லூரி. அன்புள்ள தோழர்க்கு, 15 நாள் முன்னர் என்னிடம் காரண துரைக்கண்ணர் வந்தார். சென்னையில் உங்கள் 75 ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடப் போகின்ருேம். உங்களிடம் அதுபற்றி அனுமதி கோருகிருேம் என்ருர்-கன்று என்றேன். மேலும் நான் அவரிடம் சொன்னது என்ன என்ருல்-பலர் இவ்வாறு என்னை அனுமதி கேட்கிருர்கள். அவர்களுக் கெல்லாம் நீங்களே-பதில் எழுதி அனுமதியும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அப்படியானல் விழாவுக்கென மத் தி ய க் கு மு ஒன்று அமைக்க வேண்டும் என்று யோசனை கூறிஞர். நன்று என்றேன். இதை நும் தம்பி முருகரத்தினத்திடம் கூறினேன். எல் லாம் எனக்குத் தெரியும், நான் காரண துரைக்கண்ணரிடம் கலந்து ஏற்பாடு செய்து கொள்ளுகிறேன் என்ருர், மறுநாள் வந்தார். அந்த மத்தியக் கமிட்டியில்-நெடுஞ் செழியன், சிற்றரசு முதலியவர்களைப் போடலாமல்லவா? என்ருர். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப் போடலாமா என்ருர். மறுத்தேன்.