பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/125 எஸ். இராமநாதன், முன்னுள் அண்ணுமலைப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் மணவாள ராமானுஜம், வி. பி. இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார். இன்று-அதாவது பதினைந்து நாட்களுக்குப்பின் ஆர்ட் டைரக்டர் அம்மை அப்பன் வாயிலாகச் சேதி அனுப்பப்பட் டிருக்கிறது வேறு யாரையாவது கொண்டு விழாவை கடத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்று நான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்தச் சொல்லி? இதை உங்களிடம் சொல்லி வைத்தேன். பாரதிதாசன் N.B. இதனுடன் திரைப்படத்தில் மகாகவி பாரதி என்ற அறிக் கைகள் 3 அனுப்புகிறேன்.t உங்களுக்கொன்று, ஏ. சித்தையன் அவர்கட்குஒன்று. தனபால் -ஜவுளி-அவர்கட்கு ஒன்று சேர்த்து விடுக LJif பாரதியின் வரலாற்றை விரைவில் எழுதி முடித்துவிட வேண்டுமென்று பாவேந்தர் என்னிடம் கூறியதாக நான் முதலிலியே குறிப்பிட்டுள்ளேன். அப்பணி 1964 ஆம் ஆண்டு ஏப்ரலில் தான் முற்றுப் பெற்றது. அப்பணி முற்றுப் பெறுவதற்குக் காத்திருந்தது போல் இருந்து விட்டு, அப்பணி முடிந்ததும் அவர் உயிர் பி ரி ந் த து. சென்னைக்கு வந்து 'பாரதிதாசன் பிக்சர்ஸ்’ படக்கம்ப னியை ஆரம்பித்துப் பாவேந்தர் பல துன்பங்களுக்கு ஆளாளுர். இப்படக் கம்பனியே அவர் பட கம்பனியா யிற்று; இறுதி ஐந்தாண்டுகள் அவர் மன அமைதியை அடியோடு குலைத்தது; இன்னும் பத்தாண்டுகள் கழித்து வரவேண்டிய அவர் சாவுக்குக் கட்டியம் கூறியது. tபாவேந்தர் அறிக்கையைப் இந்சேர்க்கையில் காண்க.