பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/126 பாண்டியன் பரிசு பெரிய அளவில் ஒரு வரலாற்று வண் ணத்திரைப்படமாக வெளிவர வேண்டும் என்பது அவர் இடையருத ஏக்கம். சென்னைக்கு வந்த ஓராண்டில் அவ் வெண்ணம் பட்டுப் போயிற்று. அதன் பிறகு ஓர் ஆங்கி லக் கதைக்குச் "சினுேரியோ எழுதினர்; அதுவும் கனவா யிற்று. என்ருலும் அவருடைய படம் பிடிக்கும் ஆசை தீர வில்லை. சாவதற்கு ஒரு திங்கள் முன்பாக அவர் உள்ளத் தில் ஒரு பெருத்த உந்துதல் ஏற்பட்டது. பாரதியின் வாழ்க்கையையாவது படமாக எடுத்து முடித்து விடவேண் டும் என்று எண்ணினர். 'கப்பலோட்டிய தமிழன்' திரைப் படத்தைப் பார்த்த போது இவருள்ளத்தில் இந்த எண்ணம் முதலில் முளே விட்டதாம். அப்படத்தில் நடிகர் திரு S.V. சுப்பையா பாரதியாராகத் தோன்றி உணர்ச்சி பொங்க வீராவேசமாக நடித்தது இவருள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. "அப்படியே பாரதியார் போலவே இருந்தது. ஆகா! என்ன நடிப்பு! வேறு யாரும் பாரதியார் வேடந்தாங்கி அப்படி நடிக்க முடியாது. அவரைப் போட்டு 'மகாகவி பாரதியார்' என்ற படத்தை எடுக்க வேண்டும்!’ என்று பாவேந்தர் அடிக்கடி கூறியது என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. "மகாகவி பாரதியார்’ படமெடுத்தால் தமிழ்நாட்டு மக்கள் தமக்குக் கட்டாயம் ஆதரவளிப்பார்கள் என்று நம்பினர். சென்னை நடிக நண்பர்கள் எப்படியாவது கைகொடுப்பார் கள் என்று அவர் உள்ளத்தில் ஒட்டி ஊசாலாடிக் கொண் டிருந்த ஒட்டடையைத் துடைத்தெறிந்து விட்டுப் புதிய திட்டம் ஒன்று வகுத்தார். அத்திட்டத்தின் முதல் கட்டம் தான் திரைப்படத்தில் மகாகவி பாரதி' என்ற அறிக்கை. தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பாவேந்தருக்கு நண்பர் பட்டாளமும், அடியவர் திருக்கூட்டமும் உண்டு. 1942இல் பாதியா வாழ்க்கையைத் திரைப்படமாக்கப் பாவேந்தர் முயன்ருர். அதுவும் தடைப்பட்டுப் போயிற்று.