பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/127 ஒரு பெரிய அரசியல் தலைவருக்குரிய மக்கட் கூ ட் ட ம் இவர் பின்னல் உண்டு. இத்திருப் பணியைப் பாவேந்தர் சென்னைக்குக் குடிவந்த புதிதில் 1960லேயே துவக்கியிருந் தால் அவர் வா ழ் க் ைக யி ன் இறுதி நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் கழிந்திருக்கும். செல்வ வளத்தோடும் வாழ்ந்திருக்க முடியும். என் விண்ணப்பம் இதுதான். எதுவும் கல்கியிங் கெவ்வகை யானும் இப்பெருந் தொழில் காட்டுவம் வாரீர்! என்று பேேவந்தர் இவ்வறிக்கையின் மூலம்விட்ட வேண்டு கோள் காலங்கடந்த வேண்டுகோள் ஆகிவிட்டது. தயிரைக் கடைவதற்கு எடுத்து மத்தை உள்ளே விட்ட வுடன் பானையே உடைந்து விட்டது. இவவேண்டுகோள் ஒ சி ர ண் டு ஆண்டுகளுக்கு முன் பாவேந்தரிடமிருந்து வெளியாகியிருந்தால் படம் பிடிப்ப தற்கான பெருந்தொகையைத் தமிழ்நாட்டு ம க் க ளே திரட்டிக் கொடுத்திருப்பார்கள். அப்போது காமராசர் தாம் முதலமைச்சராக இருந்தார். தமிழக அரசின் ஆத ரவும் ஒத்துழைப்பும் கூட இவருக்குக் கிடைத்திருக்கும். படத்துறையை நம்பிச் சென்னை வந்ததால் பொன்னை அவர் உழைப்பும், கைப்பொருளும் வீணுயின. அவரு டைய தகுதிக்குக் குறைவான பலருடைய வாசலில் போய் நின்றதால், வாழ்நாள் முழுவதும் அவர் இறுமாப் போடு காத்துவந்த மான உணர்வும், மரியாதையும் கூடக் காயம்பட்டன. இவை எல்லாவற்றையும் விட ஒரு நாட் டின் பெருங்கவிஞன் வாழ்க்கையின் முதிர்ந்த நிலையில் பெறக்கூடிய பெருஞ்சிறப்புக்களையும், மரியாதைகளையும் கூட இவர் இழக்க வேண்டி நேரிட்டது. பாரதீய ஞானபீடம் 1964 ஆம் ஆண்டுக்குரிய ஓரிலக்க ரூபாய் இலக்கியப் பரிசை இவருக்கு வழங்குவதாக இருந்