பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|130 திருந்து 'மகாகவி பாரதி’யின் திரைக்கதையையும் வச னத்தையும் எழுதி முடித்தார். கடுமையான உழைப்பும், மன அமைதியின்மையும் அவர் வாழ்வை முடித்துவிட் L-65F. 21-4-64 சென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சென்னை யிலிருந்து என் தம்பி இளங்கோவன் எழுதியிருந்தான். மாரடைப்பினுல் தாக்கப்பட்டுச் சென்னை அரசாங்க மருத் துவமனையில் பாவேந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று இரவு சென்னை செல்லுவதற்கு வேண்டிய முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். எதற்கும் மாலைச் செய்தித் தாளைப் பார்த்து விடலாம் என்று எண்ணினேன். சேலம் மாலை முரசில் பாவேந்தர் இறப்பைப்பற்றிய செய்தி கொட்டையெழுத் தில் அவர் படத்தோடு போடப்பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்காக அன்று மாலை அவர் உடலம் புதுச்சேரிக் குக் கொண்டு செல்லப்படும் என்ற செய்தியும் வெளியாகி யிருந்தது. உடனே கடலுரர் மார்க்கமாகச் செல்லும் புகை வண்டியில் ஏறிப் புதுவை புறப்பட்டேன். அடுத்த நாள் காலை 8 மணியளவில் புதுவையை அடைந்தேன். புதுவை நகரமே வெள்ளக் காடாக இருந்தது. பெருமாள் கோயில் தெருவில் எள் விழ இடமில்லை, பாவேந்தர் வீடு தொட்டிக்கட்டு வீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென் வடலாகப் பாவேந்தர் படுக்க வைக் கப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி மாலைகளும் மலர் வளை யங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. பாவேந்த ரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதத்தைக் கண்ணிரால் நனைத்துக் கொண்டிருந்தனர். நடிகர் எம். ஆர். ராதா உள்ளே வந்து பாவேந்தருக்கு மாலையணிவித்துத் தம் இறுதி வணக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்.