பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/134 றியிருக்கலாம். அவ்வாறு தோன்றிய சில கவிதைகள் உணர்ச்சிப் பிழம்புகளாய், உயிரோவியங்களாய் வடிவம் பெற்று இலக்கியத்தில் ஏறி மக்கள் நெஞ்சில் நிலைத்து நின்றுவிட்டன. அத்தகைய சில கவிதைகளையும், அக் கவிதைகளை எழுதத் தூண்டிய வரலாற்று நிகழ்ச்சிகளை யும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். திருமணம்: இப்பாடல் 1949 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. பெரியாருக் கும் மணியம்மைக்கும் நடைபெற்ற திருமணம் இந்த நூற்ருண்டில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது என்ப தைத் தமிழகம் அறியும். அத்திருமணத்தால் திராவிடர்க் கழகம் இரண்டாக உடைந்தது, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. சமுதாய சீர்திருத்த இயக்கமாக இருந்த திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள் கையை மாற்றி, அதற்கு அரசியல் திருப்பங் கொடுத்துத் தமிழகத்தில்ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய பெருமை இந்தத் திருமணத்துக்குண்டு. இந்தத் திருமணத்தின் பின் விளைவுகள் எப்படியிருந்தா லும், திருமணம் நடந்த நேரத்தில் இது பெரிய சர்ச்சைக் கும் கொள்கைப் போருக்கும் காரணமாக இருந்தது. கழக இதழ்களான விடுதலையும் திராவிடநாடும் எதிரெதிர் பாசறைகளாக மாறின. கழக அறிஞர்கள் இரண்டு பக்க மும் அணிவகுத்து நின்று கொள்கைப் போர் நடத்தினர். அப்போர் சுவையானதாகவும், அறிவுக்குப் பெரிய விருந் தாகவும் இருந்தது. உலகத்தில் நடைபெற்ற இலட்சியத் திருமணங்களும், அவைகட்கு மறுப்புகளும் நாள்தோறும் சட்ட நுணுக்கங்களோடு வெளியாகிக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் கண்ணிர்த் துளிகள் பற்றிய பேச் சாகவே இருந்தது. அறிஞர் அண்ணுவும் கைவல்யம் அவர்களும் எதிரெதிர் நின்று எழுத்துப் போர் ந ட த் திக் கொண்டிருந்தனர்.