பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/135 “ஏழெட்டு ஆண்டுகள் பலர் முன்னிலையில் பழகி, சமைத்து உணவிட்டு, எழுத்தராகவும் செயலாளராகவும் பணி புரிந்த முப்பது வயதான ஒரு பெண், தான் மணக்கும் ஒருவரைப் பற்றித் தெரியாமலா திருமணம் செய்து கொள் வாள்?' என்று கேட்டார் கைவல்யம். - 'பெரியாரின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள நானில் லையா? சம்யத்தில்லையா? மிராந்தா இல்லையா? இதற்கு ஒரு மணியம்மை தேவையா?' என்று அண்ணு கேள்விக் கணை தொடுத்தார். அதற்குக் கைவல்யம், "நீங்கள் இருக்கலாம். శిఅవు பெரியாரின் தினவறிந்து சொறிந்துவிட உ ங் க ள ல் ஆகுமா?' என்று கேட்டார். இக்கருந்துப் போராட்டத்தில் பாவேந்தரும் உணர்ச்சி வசப்பட்டுச் சில அறிக்கைகள் வெளியிட்டுவிட்டுப் பின் னர் ஒதுங்கிக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழ கத்தின் எதிர்ப்பு அணியிலே பிறகு வாழ்நாள் பூராவும் இருந்துவந்தார். தாம் இவ்வளவு நாளாகப் பேசியும் எழுதியும் பரப்பி வந்த சீர்திருத்தக் கொள்கைக்கு மாருகத் தந்தை பெரியார் திருமணம் செய்து கொண்ட நி க ழ் ச் சி பாவேந்தரின் இந்தப் பாடலுக்கு உந்துதலாக அமைந்தது. அண்ணுகைவல்யம் ஆகியோரின் எழுத்துப் போர் அப்படியே இப் பாடலில் இடம் பெற்று விட்டது. - மாதிவள் இலை.எனில் வாழ்தல் இலை எனும் காதல் கெஞ்சக் காந்தமும், காணத் திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை கெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்! -இது உண்மையான திருமணத்துக்குப் பாவேந்தர் கொடுக்கும் விளக்கம். - -