பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/139 கொண்டிருந்தார். நானும் பொன்னடியும் கூடத்தில் அமர்ந்திருந்தோம். வெளியில் அமர்ந்திருந்த பாவேந்தர் திடீரென்று உள்ளே எழுந்து வந்தார். ‘'என்ன இது மயக்கும் மணம்? எங்கிருந்து வருது? என்ன பூ?' என்று மூக்கில் மணத்தை இழுத்துக் கொண்டே கேட் டார். நாங்களும் அக்கடி மணத்தை உணர்ந்தோம். "அது என்ன மலர் என்று பார்த்துவிட்டு வருகிருேமய்யா' என்று கூறிவிட்டு நானும் பொன்னடியும் வெளியில் சென்ருேம். பாவேந்தர் வாடகைக்கு இருந்த பங்களாவுக்கு அடுத்த பங்களா, ஓட்டல் அதிபர் புகாரி சாகியின் குடியிருப்பு. இரண்டு பங்களாவுக்கும் இடையில் கைப்பிடிச் சுவர் எழுப்பப்படவில்லை; வேலிதான் இருந்தது. அந்த வேலி யில் நைட்குவீன்’ என்ற பூ, கொத்துக் கொத்தாக மலர்ந்து அவ்வாறு மயக்கும் மணத்தைப் பரவ விட்டுக் கொண்டிருந்தது. ஒரு பெரிய மலர்க்கொத்தாக ஒடித்துக் கொண்டு வந்து பாவேந்தர் கையிலே கொடுத்தோம். அதைப் பார்த்ததும் 'இந்தப் பூத்தான? அடேயப்பா! என்ன மணம்! ......' என்று வியந்து விட்டு "ஆமா. இப் பூவோட பேரென்ன சொன்னிங்க?' என்று கேட்டார். "நைட்குவீன்' என்று நாங்கள் மீண்டும் சொன்ளுேம். "அப்படியா!' என்று கூறிவிட்டு நீண்ட நேரம் அதைக் கையில் வைத்து முகர்ந்து கொண்டே இருந்தார். பாவேந்தர் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கே வழக்கம் போல் எழுந்து பின்னல் சென்று விட்டார். நாங்கள் அவர் அறைக்குள் நுழைந்தபோது மேசைமீது கீழ்க்