பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/8 கொண்டு எல்லாரும் திரும்பினுேம். இதுவே பாவேந்த ருக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு. 1961 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 29 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணியளவில் பாவேந்தரை இரண்டாம் முறையாகப் பார்த்தேன். அன்று சென்னை இராஜாஜி ஹாலில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் பெருமன்றத் துவக்கவிழா நடைபெற்றது. அவ்விழாப் பொறுப்பாளரான திருச்சி அ.வெ.ரா, கிருஷ்ணசாமி ரெட்டியார் நேரில் சென்று அழைத்த அழைப்பை மதித் துப் பாவேந்தர் விழாவுக்குச் சற்று முன்னதாகவே வருகை தந்திருந்தார். சேலம் மாவட்டத் தமிழ் எழுத் தாளர் மன்றச் செயலாளன் என்ற முறையில் நானும் விழாவில் கலந்து கொண்டேன். பாவேந்தர் பெண்கள் கூட்டத்திடையே அமர்ந்திருந்தார். பாரதியாரின் மூத்த மகளான தங்கம்மாள் பாரதி அங்கு வந்திருந்ததால், பாவேந்தர் அந்த அம்மையார் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பெருந்தலைவர் காம ராசர், டாக்டர் சுப்பராயன், மீ.ப. சோமசுந்தரம் ஆகி யோரும் அன்றைய விழாவில் கலந்து கொண்டனர். காம ராசர் மேடைக்கு வந்ததும் பாவேந்தரைப் பார்த்தார். உடேன விழாப் பொறுப்பாளரை அனுப்பிப் பாவேந்தரை அழைத்து மேடைமீது தம்மருகில் உட்காரவைத்துக் கொண்டார். காமராசர் குத்து விளக்கேற்றி மன்றத்தைத் துவக்கி வைத்தார். பாவேந்தர் மன்றத்தை வாழ்த்தும் முகத்தான் சில சொற்கள் நறுக்குத் தெறித்தாற்போல் சொன்னர்: 'தமிழ் எழுத்தாளன் முதலில் தமிழை ஒழுங்காகக் கற்க வேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும் எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவகை இருக்க