பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள் கன் சேலம் நகரவைப் பள்ளியில் தமிழாசிரியராகப் Ligos! யாற்றும் முருகுசுந்தரம் தமிழ் இலக்கிய மேடை தொறும் தம் கவிதைகளை மெல்லிய பூங்காற்ருய் வீச வைத்த புதுமைக் கவிஞர்; "உருகும் திருவாசகத்திற்கு நெஞ்சென்பர்; இவர் வாசகமும் அவ்வாறே என்று கலைஞர் நாவையே வியந்து பேச வைத்த புகழ்க்கவிஞர். () பாவேந்தர்'குயிலிலும் சுரதாவின் கவிதைஇதழ்களிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முருகு 'கடை திறப்பு:பனித்துளிகள்'போன்ற தொகுதிகளால் கவிதை யின் கல்லழகை எவரும் எளிதில் வசப்படும் வகையில் அறிமுகப்படுத்தியவர்.உலகப் புகழ்பெற்ற சொற்பொழி வுகளையும் கடிதங்களையும் கட்டுரைகளையும் கவிதை களாக்கிப் புதுநெறி காட்டியவர். © பாவேந்தரின் பரம்பரையைச் சேர்ந்த இவர் பாவேந்த ரின் கடைசி நாட்களில் அவரோடு நெருங்கிப் பழகி அவரிடம் கண்டும் கேட்டும் அறிந்த நிகழ்ச்சிகளை ’பாவேந்தர் நினைவுகளாக்கியுள்ளார். "பாவேந்தர் என் னும் பவளமல்லிச் செடியை நான் சென்னையிலும் சேலத்திலும் சுற்றிச் சுற்றி வந்தபோது அது தாளுக உதிர்த்த மலர்களையும் கானே விரும்பிப் பறித்த மலர் களையும் மட்டுமே இந்நூலில் படைத்திருக்கிறேன்" என்கிருள். © கவிஞர் ஒருவரைப் பற்றிக் கவிஞர் ஒருவரால் எழுதப் பெற்ற இந்நூலின் இன்னொரு பகுதி விரைவில் வெளி வரவிருக்கிறது. இது ஒரு அகரம் வெளியீடு