பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/9 வேண்டும்' என்று இந்த இரண்டு கருத்தை மட்டும் சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டார். இரண்டு அல் லது மூன்று நிமிடமே பேசியிருப்பார். அதற்குள் இந்த நாட்டு எழுத்தாளனுக்குக் கட்டாயம் எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார். மூன்ரும் முறையாகப் பாவேந்தரை பார்த்தது சேலத்தில், தமிழகப் புலவர் குழு 25-9-80இல் சேலம் வந்திருந் தது. சேலம் நீதிக்கட்சிப் பிரமுகர் திருவாளர் பி. இரத் தனசாமிப் பிள்ளை தம்முடைய மாமாங்கம் தோட்ட மாளி கையில் புலவர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்தார். மாலையில் சேலம் திருவள்ளுவர் கழகம் புலவர் குழுவுக்கு ஒரு வரவேற்பு வழங்கியது. டாக்டர் மு.வ. அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி எங்கள் நகர வைப் பள்ளி மைதானத்தில் போடப்பட்ட பெரிய மேடை யில் நடைபெற்றது. புலவர் குழுவில் ஒரு வழக்கமுண்டு. புலவர் குழுவில் உள்ள நாற்பது பேரும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேச முடியாது. எனவே ஒவ்வொரு கூட்டத்திலும் சீட்டும் போட்டுப் பத்துப்பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் மட்டுமே பேசுவார்கள். கூட்டம் தொடங்கியது. சேலம் திருவள்ளுவர் கழகத்தின் ஆசிரியரான புலவர் நடேச உடையார் வரவேற்புரை வழங்கினர். பிறகு தேர்ந்தெடுக் கப்பட்ட பத்துப் புலவர்களும் பேசினர். அப்புலவர்களுள் பாவேந்தர் இடம் பெறவில்லை. கூட்டத்திலிருந்து ஒரு சிலர் பாவேந்தர் பேசவேண்டும் என்று சொல்லித் துண் டுச் சீட்டு எழுதிக் கொடுத்தனர். பொது மக்களின் விருப் பத்திற் கிணங்கப் பாவேந்தர் எழுந்து பேசினர். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு சில திங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் திரு. வி. க. மறைமலையடிகள் ஆகியோரின் உரைநடை