பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/10 யைக் கூட்டத்தில் கேலி செய்திருந்தார். இதைப் பற்றிக் குறிப்பிட்ட பாவேந்தர் பெருஞ்சீற்றங் கொண்டு, "தமிழ் நாட்டிலே, தமிழர்கள் நடுவிலே, தமிழறிஞர் ஒருவரின் படைப்பை ஒருவன் கேவலமாகப் பேசுகிருன். மான உணர்விருந்தால் நீங்கள் இதைப் பொறுத்துக் கொண் டிருப்பீர்களா? எப்போது அவன் தமிழை இழித்துப் பேசி ேைன, அப்போதே அவன் தலை கீழே அற்று விழுந்து விட்டது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பரவியிருக்க வேண்டாமா?’ என்று பேசினர். உணர்ச்சி வெறியினுல் அவர் குரல் கம்மியது; கண்களில் நீர்கசிந்தது. இதுவரை பாவேந்தரைப் பார்த்ததோடு சரி. அடுத்த ஆண்டுத் துவக்கத்திலிருந்து பாவேந்தருக்கும் எனக்கும் உள்ளங்கலந்த பழக்கமும், நெருக்கமும், அடிக்கடி சந்தித் துப் பேசும் வாய்ப்பும், கடிதத் தொடர்புகளும் ஏற்பட்டன. இந் நெருங்கிய தொடர்பு அவர் இறக்கும் வரை இருந்து கொண்டிருந்தது. கி.பி. 1962இல் சைதாப்பேட்டை ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.டி. படிப்பதற்காக வந்து சேர்ந்தேன். பாவேந்தர் அருகிலேயே குடியிருந்தார். பெரும்பாலும் கல்லூரி விட்ட நேரங்களில் பாவேந்தரோடு தான் இருப்பேன். அவரோடு பழகும் நேரங்களில் அவர் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு ஒரு சுவடியில் குறித்துக் கொண்டேன். அக் குறிப்புகளை அப்படியே நாட்குறிப்புப் போலவே கொடுத்திருக்கிறேன்; என் நினைவில் நின்ற அவரைப்பற்றிய பொதுவான செய்திகளை ஒரு கட்டுரை யாக்கிக் கொடுத்திருக்கிறேன். பாரதியாரைப்பற்றி அவர் குறிப்பிட்ட செய்திகளையும் ஒரு தனிக் கட்டுரையாக்கியுள் ளேன். O.