பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/16, "பரவாயில்லைங்கையா! இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் போக முடியாது' என்றேன் தான். 'ஆமா! அங்கே விடுதிக்குக் கட்ற பணமும் வீணுயிடும். அப்ப ஒன்னு செய். அடிக்கடி வந்து சாப்பிட்டுவிட்டுப் போ' என்ருர். நானும் “சரி” என்றேன். படுக்கையறையில் ஒரு மரக்கட்டில். அதன்மீது மெத்தை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அம் மெத்தையின் மீது அழ கான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய விரிப்பு ஒன்றும் போடப்பட்டிருந்தது. அந்த விரிப்பின் வேலைப்பாடு என் உள்ளத்தைக் கவர்ந்தது. பாவேந்தர் கட்டிலில் படுத்திருந் தார். நான் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந் திருந்தேன். பழைய காலத்து ஜி. இ. சி. மின் விசிறி ஒன்று மேசை மீது இரைச்சலோடு ஒடிக் கொண்டிருந்தது. 'எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. பன்னிரண்டு மணிக்குத்தான் துரங்குவேன். இங்கிலீஸ் படத்துக்குப் போவமா?” என்ருர் பாவேந்தர். 'சரி போகலாம்' என்றேன். இருவரும் அருகிலே இருந்த இராஜகுமாரி (சகானிஸ்) திரைப்படக் கொட்டகைக்குச் சென்ருேம். அன்று 'Kingdom Of Beauty' என்ற ஒரு சீனப்படம் நடந்து கொண் டிருந்தது. அது ஆங்கிலத்திலே 'டப்' செய்யப்பட்டிருந் தது. படத்தின் நடுவே கொட்டகையில் இகுப்பவர்கள் சிரித்தால் 'ஏன் சிரிக்கிருர்கள்?’ என்று கேட்பார். உடனே நான் காரணத்தை விளக்குவேன். படம் புரியாவிட்டாலும் படத்தில், காட்டப்பட்ட இயற்கைக் காட்சிகளை வியந்து பாராட்டினர். அதில் பாடப்பட்ட சீனப் பாடல்கள் நம் தமிழ் வண்ணப்பாடல்களைப் போலவே இருப்பதாகச் சொன்னர் படம் பார்த்துவிட்டு அன்று.நானும் பாவேந் தர் வீட்டிலேயே படுத்துக் கொண்டேன். காலையில் 7.36 குக் கல்லூரி துவங்குவதால் கண் விழித்ததும் பாவேந்த