பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்117 ரிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்துவிட் டேன். நான் புறப்பட்டு வந்த பிறகு, பொன்னடியைக். கூப்பிட்டு என் பாடலை எடுத்துக்காட்டி ‘தோ... இரவு வந்தாரே அவர் என் மீசையைப் பத்திக் கவிதை பாடி யிருக்கிருர்" என்று சொன்னராம். [T] 20–1—62 ஞாயிறு 口 ஞாயிற்றுக்கிழமை வாச விடுமுறையாகையால் அன்று என் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு மாலையில் சை ை பஜாரில் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு இசவு எட்டு மணிக்குக் கல்லூரி விடுதிக்கு வந்தேன். உடனே பக்கத்து அறைக்கார நண்பர்கள் 'பாரதிதாசன் வீட்டிலிருந்து உங்களைத் தேடி ஓர் இளைஞர் வந்திருந் தார். பாரதிதாசன் உம்மைக் கையோடு அழைத்து வரச் சொன்னுராம்' என்று கூறினர்கள். உடனே உந்து வண்டியேறி 9 மணி வாக்கில் பாவேந்தர் இல்லத்தை அடைந்தேன். பொன்னடி எனக்காக முற்றத் தில் காத்திருந்தார். ‘என்ன முருகு? ஏன் இரண்டு. நாளாக வரவில்லை. கவிஞர் அடிக்கடி என்னைக் கேட்பார். “ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாச்சே? ஏன் வரவில்லை? போய்க் கூட்டிக்கொண்டு வா!' என்று சொல்லி என்னே அலுப்பி வைத்தார். அதனுல் தான்.தான் கல்லூரி விடு: திக்குத் தேடி வந்தேன். எங்கு போயிருந்தீர்?’ என்று: கேட்டார்.