பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/18 நான் வெளியில் சென்றிருந்த காரணத்தைப் பொன்னடி யிடம் கூறிவிட்டுக் கவிஞரின் அறைக்குச் சென்றேன். கவிஞர் கட்டிலில் படுத்திருந்தார். என்னைக் கண்டதும் 'ஏம்ப்பா இன்னைக்கு வரலை? உனக்காக இன்னைக்குக் கோழிக்கறி, இருல் எல்லாம் வாங்கிவந்து சமைக்கச் சொல்லியிருந்தேன்?' என்ருர், 'ஐயா! இன்று கொஞ்சம் வெளிவேலை இருந்தது. உற வினர் வீட்டுக்குப் போயிருந்தேன்’ என்று சொன்னேன். பிறகு சாப்பிடச் சொன்னுர்; சாப்பிட்டேன். அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால், திரா விடர்க் கழகப் பிரசார நாடகம் ஒன்று கவிஞர் வீட்டில் ஒத்திகை பார்க்கப்பட்டது. கவிஞருக்கு வேண்டிய கோவிந்தராசன் என்பவர் அந்த நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர் சில பாடல்களை இசையோடு பாடிக் காட்டினர். நடிக நடிகையருக்கு நடித்தும் காண் பித்தார். ஒரு பெண் மிகவும் இனிமையாகப் பாவேந்தர் பாடல்களைப் பாடினுள். அப்பெண்ணைப் பார்த்து, ‘'என்ன? தட்டுக்குச்சி மாதிரி இருக்கே? இப்படியிருந்தா எப்படிப் பாடுவ? பாடனுமுன்னு உடம்பு நல்லா இருக்க ணும்' என்று கூறினர். நாடகத்தில் கதாநாயகியாக நடித்த பெண் படுசுட்டி. கவி ஞரின் காலடியில் அமர்ந்து கொண்டு அன்பாகவும் பணி வாகவும் பேசுவாள். பாவேந்தர் படுக்கையின் மீது விரித் துப் போடப்பட்டிருந்த விலையுயர்ந்த விரிப்பு அவள் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒத்திகை முடிந்து போகும்போது அதைத் தனக்குக் கொடுக்கும்படி கவிஞரி டம் கேட்டாள். 'இது தானே? எடுத்துக்க...' என்று சொல்லி விரிப்பை அவள் கையில் கொடுத்து விட்டார். எல்லாரும் படுக்கப் போகும்போது இரவு 1 மணியிருக்கும். விடியற்காலம் 5-30 மணிக்கு எழுந்து நான் புறப்பட்டேன். கவிஞர்