பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்|19 எனக்கு முன்பாகவே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சமையலறையில் மேசை மீது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த வண்ணம் காலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். இரவு எந்நேரம் படுத்தாலும் விடியற் காலை 5 மணிக்கே எழுந்திருப்பது கவிஞர் பழக்கம். கவிஞ ரிடம் விடைபெற்றுக் கொண்டு தான் சைதாப்பேட்டை புறப்பட்டேன். [I] 26–1–62 வெள்ளி 口 இன்று ஒரு குறிப்பிடத் தக்க நாள். "அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் இன்று பாவேந்தர் இல்லத்தில் துவக்கப்பட்டது. நான் காலையிலேயே கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தேன். கவிஞர் பாரதி சுந்தரம் என்ற ஓர் அன்பர் வந்திருந்தார். அவர் பேச்சும் நடவடிக்கைகளும் எப்போதும் மற்றவர் கவனத்தைக் கவ ரும்படி இருந்தன. அவரோடும் பொன்னடியோடும் பேசிக் கழித்தேன். நடுப்பகல் உணவைக் கவிஞர் வீட்டிலேயே உண்டுவிட்டு அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டேன். துவக்க விழாவில் கலந்து கொள்ள ஒவ்வொரு கவிஞராக வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் சிற் றுண்டி வழங்கப்பட்டது. வந்தவர்களுள் நா.ரா.நாச்சி யப்பன், அமீது, வல்லம் வேங்கடபதி, வேழவேந்தன், தமிழ்முடி, தமிழழகன், நாக.முத்தையா, பொன்னடியான், நாரண துரைக்கண்ணன், பாரதி சுந்தரம், சி.பாலசுப்பிர மணியன், திருநாவுக்கரசு, செந்தாமரை, ஜமதக்னி, சகுந்தலா பாரதி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.