பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|20 சதாவதானி ஷெய்குதம்பிப் பாவலரின் மகனும் செந்தர மரை என்னும் புனைபெயரில் எழுதி வந்தவரும், வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த்வருமான திரு. அமீது பாவேந்தரின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது பற்றித் தம் கருத்துக்கள்ைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். ஜமதக்னி என்பவர் இந்தியும் தமிழும் வல்ல ஒரு கவிஞர், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். இந்தியில் உள்ள 'காமாயினி” என்ற காப்பி யத்தைக் காமன் மகள்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிருர், பாரதியாரின் இளைய மகள் சகுந்தலர் 'பாரதிக்கு அப் போது வயது ஏறத்தாழ ஐம்பதிருக்கும். கண்பார்வை சற்று மந்தமாக இருந்தது. அதை அறிந்து பாவேந்த்ர் மிக வருந்தி, "நான் எடுத்து வைத்திருந்து வளர்த்த குழந்தை; இவளுக்கு அதற்குள் கண்ணுெளி க்ெட்டுவிட் டதே!' என்ருர். சகுந்தலா பாரதியும் பாவேந்தரை அடிக்கொருதரம் 'மாமா! மாமா!' என்று அழைத்து அன் புக்கடலில், ழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்தால்)(iப்படி இருந்திருப்பார் என்பதை ஒரளவு புரிந்து கொள்ளலாம். நன்ருகப் பழுத்த எலுமிச்சம்பழத் தின் நிறம்; ஒற்றை நாடி உடம்பு; உட்காருவது கூடப் பாரதி போலச் சப்பணம் போட்டு மார்பையும் தலையை யும் நிமிர்த்து உட்கார்ந்திருந்தார். பேசுவதும் பாரதி போலவே வெடுக்கென்று பேசினர். மாலை 6 மணியளவில், அவரது கணவர் வந்து அவரை இல்லத்துக்கு அழைத்துச் சென்ருர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் பெருமன்றத் துவக்கவிழா வில் பாவேந்தர் பேச்சில் பொதிந்திருந்த கருத்துக்கள் பின் வருமாறு: - உலகின் பலநாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்கள் எல்லாரையும் ஒன்ருகத்திரட்டி ஒரு பெரிய சக்தியாக,