பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/24 டார். நானும் பொன்னடியும் முன்னலிருந்த வரவேற் பறையில் படுத்திருந்தோம். பாவேந்தரோடு பழகத் தொடங்கிய இந்த ஒரு வாரத்தில் இன்று எனக்குப் புது அனுபவம். பாவேந்தர் மது அருந்துவார் என்று கேள்விப்பட்டதுண்டு; ஆல்ை நேரில் பார்த்ததில்லை. என்னைக் கண்டு அவர் நாணுவாரோ என்ற அச்சத்தால் அவர் விருந்துண்ணத் தொடங்கிய திலிருந்து நான் அவர் கண்ணில் படாமல் இருந்தேன். சாப்பிட்ட பிறகும் அவர் கண்ணில் படாமல் படுத்துக் கொண்டேன். இதைக் கவனித்திருப்பார் என்று எண்ணு கிறேன். - இரவு 10-30 மணிக்கு 'முருகு' என்ற குரல் பாவேந்தர் அறையிலிருந்து கேட்டது; எழுந்து ஓடினேன். பாவேந் தர் எந்தவித மாறுபாடும் இல்லாமல் கம்பீரமாக, அமைதி யாகப் படுக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். நான் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். இருவரும் என்ன பேசுவதென்று தெரி யாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். பிறகு பாவேந்தரே தூக்கம் வரலை என்று பேச்சைத் துவக்கினர். பிறகு அன்று நிகழ்ந்த பெருமன்றத் துவக்க விழா பற்றி யும், விழாவுக்கு வந்திருந்த கவிஞர்களைப் பற் றி யு ம் பேச்சுத் திரும்பியது. சகுந்தலாபாரதி அவர் தந்தை போலவே இருப்பதாக நான் சொன்னேன். பாவேந்த ரும் "ஆமாம்! பாரதி நல்ல உயரம். ஒடிசலான உடம்பு; பொன்னிறம்; சுடுவது போன்ற பார்வை; துடிப்பான மீசை. பாரதியின் ஆற்றல் முழுமை பெற்றிருந்த நேரத் தில் பிறந்த பெண் சகுந்தலா. சகுந்தலா என்று இந்தப் பெண்ணுக்குப் பாரதி பெயர் வைத்ததற்கு முக்கியக் கார ணம் உண்டு. பாரதி புதுச்சேரியிலே இருந்தபோது வ.வெ.சு.அய்யர், வ.ரா. முதலிய நண்பர்களோடு கூடிக் காளிதாசனின் ‘சகுந்தலை"யை நாடகமாக நடிக்கத் திட்ட