பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்|26 'பட்டுக்கோட்டை கலியாணசுந்தரமும் மு. அண்ணுமலே யும் கொஞ்சநாள் எங்கிட்ட புதுச்சேரியிலே இருந்தாங்க. இரண்டுபேரும் என் பாட்டைப் பேர்த்து எழுதுவானுங்க. பட்டுக்கோட்டை இருக்கானே ரொம்ப அமைதி. என் எதிரிலேயே பயபக்தியோட வாய் கூடத் திறக்காம உட் கார்ந்திருப்பான். என்கிட்ட அளவு கடந்த மரியாதை. எதை எழுதினாலும் 'பாரதிதாசன் வாழ்க’ன்னு மேலே போட்டுட்டுத்தா எழுதுவான். அவன் இவ்வளவு வேகமா வளருவான்னு நான் அப்ப நெனைக்கில. அந்த அறிகுறி எதுவும் அப்பத் தென்படல.’’ மாலையில் கவிஞர் மன்றத் துவக்க விழாவில் அவர் பேசிய கருத்துக்களின் மீது எங்களுடைய பேச்சுத் திரும்பியது. ஆண்டுதோறும் இந்திய ஜனதிபதி முன் தில்லியில் நடை பெறும் பன்மொழிக் கவியரங்கத்திற்குத் தமிழகத்தின் சார்பில் மேலிடச் செல்வாக்குப் பெற்ற ஊர்பேர் தெரி யாத கவிஞர்களே அனுப்பப்படுகின்றனர் என்பதைப் பற்றி நாங்கள் பேசியபோது, புதுச்சேரியில் அவர் ஆசிரி யப்பணியில் இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையோடு எடுத்துக்கூறினர்: "சேஞ்சான்னு ஒருத்த...' "என்ன சொன்னிங்க?" என்றேன் நான். "செயிண்ட் ஜான் அவைேட பேர். காரைக்காலிலே அவன் ஒரு அவுக்கா(வழக்குரைஞர்). அவனை சேஞ்சான்...சேஞ் சான்னு எல்லாரும் கூப்பிடுவோம். வழக்குரைஞர் பட்டம் பெற இவன் பிரெஞ்சுநாடு போயிருந்தான். ஏதோ தமி ழறிந்ததா அங்கே காட்டிக்கிட்டான். அவன் புதுச்சேரி திரும்பி வந்ததும் பிரெஞ்சு அரசாங்கம் அவனைத் தமிழ்த் தேர்வுக் குழுவோட தலைவன ஆக்கிட்டாங்க. அவனுக்கு தமிழுந் தெரியாது, ஒரு மண்ணுந்தெரியாது. புதுவை