பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/27 யிலே ஒரு தமிழ்த்தேர்வு நடந்தது. அந்தத் தேர்வோட விளுத்தாளிலே ‘கல்லாதான் ஒட்பம்' என்று தொடங்கும் குறள் இடம் பெற்றது. அந்தப்பாட்டு சேஞ்சானுக்குப் புரியல. கல்லாதான் நொட்டமா, கல்லாதான் ஒட்டமா, கல்லாதான் ஓட்டமான்னு அவனுக்கு ஐயம். கடைசியிலே 'கல்லா தான் ஓட்டம் கழியதன் ருயினும்னு விளுத் தாளி லேயே அச்சுப் போட்டுட்டான். இது என் கவனத்துக்கு வந்துச்சு. விடைத்தாள்களை தானே திருத்தி மதிப்பெண் போட்ட. அதுக்குப் பிறகு புதுச்சேரியிலே தமிழைப் பொறுத்தவரையிலும் எந்த ஐயமுன்னுலும் ...போ...சுப்பு ரத்தினத்துக்கிட்டன்னுதா சொல்வாங்க. இதை எதுக்குச் சொல்றன்ன எந்த விதத்திலும் தகுதியில்லாதவன்தா வெளியுலகுக்குப் போயித் தன்னைக் கவிஞனென்றும், அறிஞனென்றும் விளம்பரப்படுத்திக்கரு' என்று குறிப் பிட்டார். இரவு மணி பன்னிரண்டாகி விட்டது; தூக்கம் வரும் போலிருந்தது. அப்போது பாவேந்தர் தாமே மதுவைப் பற்றிப் பேசத்தொடங்கினர். "நான் வாரத்திலே இரண்டு மூன்று நாள் மட்டும் அளவோடு குடிப்பது வழக்கம். அள வோடு குடிப்பது உடம்புக்கும் நல்லது, எங்க பக்கத்திலே இது உணவு மாதிரி. வீட்டில பெண்களே கொஞ்சம் ஊற்றி உணவுக்கு முன்னுல அளவோடு கொடுப்பாங்க. எப்போதுமே, "குடிப்பது குடிப்பதற்காக என்பது தவ ருண கொள்கை. குடிப்பது உணவைச் சுவைத்துச் சாப்பிடு வதற்குத் துணை செய்ய வேண்டும். அந்த அளவுதான் குடிக்கணும். நீ புதுச்சேரி வந்தா பார்க்கலாம். புதுச்சேரிக் கார எவனும் அளவுக்கு மீறிக் குடிச்சுப்புட்டு வீதியிலே வரமாட்டா. அப்படி எவளுவது குடிச்சுப்புட்டு வீதியோ ரத்திலே உருண்டு கிடந்தான்ன அவ புதுச்சேரிக்கார அல்ல. சேலத்துக்கார" என்று கூறிவிட்டு உரக்கச் சிசித் தார். நானும் சிரித்து விட்டு எழுந்து வந்து படுத்துக் கொண்டேன்.