பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/29 காட்டி, 'இந்த மடையன் என்ன வீட்டிலிருந்து நடக்க விட்டே கூட்டிக்கிட்டு வந்தா' என்று வருத்தத்தோடு சொன்னர். 'எந்த ஊருக்குப் புறப்படுகிறீர்?' என்று நான் கேட் டேன். 'குடியேற்றம் (குடியாத்தம்) போற. இராசகோபால் நாயுடு குடியேற்றம் காங்கிரஸ் வேட்பாளர். அவரை ஆதரிச்சுத் தேர்தல் கூட்டத்திலே பேசறத்துக்காக போற’’ என்ருர் பாவேந்தர். 'அவர் பஸ் முதலாளியாயிற்றே. உங்களுக்கு ஒரு கார் அனுப்பக்கூடாதா?’ என்று நான் கேட்டேன். 'அனுப்பலாம்' என்று சொல்லிவிட்டு, அங்கே நின்று கொண்டிருந்த கோவிந்தாாசனைக் காட்டி, 'இவனை அவர் எப்படி மதிக்கிருரோ?' என்று கூறினர். அதற் குள் உந்து வண்டி வந்து விட்டது. அவரை வண்டியில் ஏற்றிவிட்டு நான் கல்லூரி சென்றேன். 口 2–2–62 வெள்ளி [T] மாலை 6 மணியளவில் கவிஞர் இல்லம் சென்றேன். குடி யேற்றம், விழுப்புரம் தேர்தல் கூட்டங்களை முடித்துக் கொண்டு 31-1-82 புதன்கிழமையே கவிஞர் சென்னை திரும்பிவிட்டார். மூன்று நாட்களாகக் கவிஞரைப் பார்க் காதது என்னவோ போல் இருந்தது. அறைக்குள் நுழைந்தபோது மேட்ைடு முறையில் கோட்டும் சூட்டும்