பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள் |30 அணிந்த ஓர் இளைஞர் பாவேந்திரின் 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா என்ற பாடலை ஈடுபாட்டோடு பாடிக்கொண்டிருந்தார். பாடும் பாணியும் குரலும்கூடக் கணிரென்று சிதம்பரம் ஜெயராம னுடையதைப்போல் இருந்தன. அவருக்கு எதிரில் மற் ருெரு நண்பரும் உட்கார்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் மிக்க ஆர்வத்தோடு, 'வா! எங்கே மூணு நாளாக் காணுேம்? தோ...இவர் கவிஞர் தஞ்சைவாணன் எம்.ஏ. சட்டக் கல்லூரி மாணவர். இவர் "ம்யூசிக் டைரக்டர்'; பல படங்களுக்கு இசையமைக் கிருர்' என்று அறிமுகப்படுத்தினர். என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்போது, 'இவர் முருகுசுந்தரம் எம்.ஏ. பெரிய கவிஞர். சேலம் காலேஜிலே புரொபசர். எனக்கு ரொம்ப வேண்டியவர்' என்று சொன்னர். 'அரங்க.ராமானுஜம் என்பது கவிஞர் தஞ்சைவாணனின் இயற்பெயர். 'என்புதோல் போர்த்த உடம்பு’ என்று வள்ளுவப் பெருமான் வகுத்த வைர வரிகள் வேறுயாருக்கு மல்ல; இவருக்குத்தான். நாகரிகமாகச் சொன் ல்ை "நடக்கும் கோல்’ என்று சொல்லலாம். தம்முடைய பூஞ்சை உடம்பைச் சற்றுப் பார்ப்பவர் கண்ணில் பெரிது படுத்திக் காட்டுவதற்காக எப்போதும் மொத்தமான கோட்டணிந்து காட்சியளிப்பார். பாவம்! இப்போது எப்படி இருக்கிருரோ? சென்னை வானொலி நிலையத்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கிருர்; நுட்பமானவர். எதைப் பேசிலுைம் ஈடுபாட்டோடு பேசுவார். உடனி ருந்த இசையமைப்பாளர் யாரென்று நினைவில்லை. 'கட்சி அரசியல் உங்களுக்கு வேண்டாம்; நீங்கள் தமி ழர்க்குப் பொதுவானவர்' என்று நான் பாவேந்தருக்கு அடிக்கடி கூறுவதுண்டு. நான் கூறும்போது அவரும் 'சரி' என்று கூறுவார். ஆல்ை வாய்ப்பு நேரும்போது