பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/35 வழக்கமாகப் புலவர் வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் மாலையில் கூடும் மன்றத்தில் ஒவ்வொருவரும் 'நான் அவரைப் பிடித்தேன்; இவரைப் பிடித்தேன்; எனக்குத் தான் முதல் மதிப்பெண் கிடைக்கும்’ என்று பேசிக் கொண்டார்கள். நான் வாயே திறக்கவில்லை; மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். புதுவைக் கல்வி இயக்குநரின் செயலாளராக இருந்த திரு. கையார் என்பவர் என் தந்தையின் நெருங்கிய நண்பர். அவர் என்னைக் கூப்பிட்டு, 'சுப்புரத்தனம்! தமிழாசிரியர் வேலைக்கு ஒரே ஒரு இடம்தான் காலியிருக்கிறது. அது வும் நிரவியில்தான். நியாயமாக அந்த இடம் உனக்குத் தான் கிடைக்கவேண்டும். காரணம் நீதான் முதன்மை யாகத் தேர்வில் வெற்றிபெற்றிருக்கிருய். அதுவுமில்லா மல் நீ அரசாங்க உதவித்தொகை பெற்றுப் படித்தவன். சட்டப்படி அரசாங்க உதவித்தொகை பெற்றுப் படித்த வனுக்குத்தான் முதற்சலுகை. உன்னிடத்தில் உள்ள ஒரே குறை நீ உருவத்தில் மிகச்சிறியவன்; பொடியன். நீ நேர்முகத் தேர்வுக்கு வரும்போது இரண்டு மூன்று சட்டையணிந்து, அவைகளுக்குமேல் ஒரு கோட்டும் அணிந்து வரவேண்டும். உன்னை உயரமாகக் காட்டிக் கொள்வதற்காகக் குதியுயர்ந்த பூட்சு போட்டுக் கொண்டு வா. கல்வி இயக்குநரிடம் தைரியமாகப் பேசு! நான் உத வித் தொகை பெற்றுப் படித்தவன்; எனக்குத்தான் வேலை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் ஆளுநரைச் (Governor) சென்று பார்ப்பேன் என்று சொல்லு. நான் அருகில் தான் இருப்பேன்’ என்று கூறினர். வீட்டுக்கு வந்து தந்தையிடமும் சொன்னர். தந்தை என்னைக் கூப் பிட்டு, ‘என்ன, கையார் சொன்னபடி சொல்வாயா?” என்று கேட்டார். 'என்னப்பா? இதுகூடவா என்னுல் சொல்ல முடியாது?" என்று தந்தையிடம் நான் கூறினேன்.