பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/36 நேர்முகத் தேர்வும் வந்தது. கையார் சொன்னபடி உடை யணிந்து சீஃபின் (கல்வி இயக்குநரை அங்கு சீஃப் என்றே அழைப்பார்கள்) முன்னல் போய் நின்றேன். கொஞ்சமும் அஞ்சாமல் கையார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தேன். சீஃப் அருகிலிருந்த செயலாள ரான கையாரைப் பார்த்து, 'அப்படி ஒரு சட்டம் இருக் கிறதா?’ என்று கேட்டார். கையார் சட்டத்தை உடனே எடுத்துக் காட்டினர். 'சரி நீ போ! வேலை உனக்குத்தான்' என்று சீஃப் சொன்ஞர். கையார் அன்று மாலையே அலுவலில் சேர் வதற்குரிய ஆணையைக் கையோடு வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார். - கையார் கொடுத்த ஆணையைச் சட்டைப் பையில் போட் டுக்கொண்டு வழக்கம் போல் புலவர் வகுப்பு நண்பர்கள் கூடும் மன்றத்துக்குச் சென்றேன். அங்கிருந்த நண்பர் கள் "வேலை எனக்குத்தான்; உனக்குத்தான்’ என்று தம் பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர். அந்த மன்றம் இருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் வடை சுட்டுக் கொண்டிருந்தார். அங்கு சென்று நான் மகிழ்ச்சியோடு வடை சாப்பிட்டேன். கடைசியாக எல்லாரும் புறப்படும் நேரத்தில் என் ஆணையை எடுத்துக் காண்பித்தேன். நண் பர்களில் ஓரிருவர் தவிர எல்லாருமே மகிழ்ச்சியடைந்தார் கள். சில நண்பர்கள் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத் துச் சென்று விருந்து வைத்தார்கள். ஆதிமூலம் என்ற நண்பரின் தந்தை எனக்குக் கடிகாரம் ஒன்று பரிசாகக் கொடுத்தார். வேறு சில நண்பர்கள் சட்டை, சால்வை முதலியவை பரிசாக அளித்தார்கள். இது என் மாணவப் பருவ வாழ்க்கை வரலாறு. ’’ - [] -