பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/38 களை நாம் தலைப்பக்கம் தானே போடுகிருேம்? அதன்படி கால் சட்டையையும் தலைப்பக்கம்தானே போட்டிருக்க வேண்டும்? எப்படி அதைத் தலைப்பக்கம் போட்டிருப்பார் கள் என்று அவ்வூர் மக்கள் வியப்போடு பார்ப்பதுண்டு. சிலர் இந்த ஐயத்தை என்னிடம் கேட்டுத் தெளிவு பெறு வதும் உண்டு. என் தமிழ்ப் புலமையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை யும் உறுதியும் உண்டு. எனக்குத் தமிழ் பயிற்றிய மூன்று ஆசிரியர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். கால்வே கல்லூரியில் எனக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சாரம் பூ.ஆ. பெரியசாமிப்புலவர் தமிழ்க்கடல். அவருக்கு ஒப்பாகத் தமிழ்நாட்டில் யாரையாவது சொல்ல வேண்டு மால்ை மதுரை அரசஞ்சண்முகைைரச் சொல்லலாம். இத்தகைய பெரியார்களிடம் தமிழ்கற்ற நான், எப்போ தும் எந்தப் புலவரிடமும் அஞ்சியதில்லை. பெரும் புலவர்களின் பகையைச் சில சமயங்களில் நானே விரும்பித் தேடிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. பள்ளி முடிந்து திரும்பும் போது, நிரவியின் தெருத் திண் ஜனகளில் நான் பல சுவையான காட்சிகளைக் காண்ப துண்டு. அவ்வூர் வன்னியர்கள் வைணவப் பற்று மிக்க வர்கள்; நாமதாரிகள். அவர்களில் சில முதியோர் தெருத் திண்ணையில் அமர்ந்து "பள்ளியானே! பள்ளி யானே!' என்று முடியும் ஆழ்வார் பாசுரங்களை உரக்கப் பாடிக் கொண்டிருப்பார்கள். நாள்தோறும் ஒரே பாடலைப் போகும்போதும் வரும்போதும் கேட்டுக் கேட்டு எனக்குப் புளித்துப்போய்விட்டது. நான் அவர்கள் உட்கார்ந்திருக் கும் திண்ணைக்கருகில் வரும் போது, 'நீ தான் எப்பவே பள்ளி ஆயிட்டயே. இன்னம் பள்ளிt ஆனேன்; பள்ளி ஆனேன்னு ஏன் கத்திக்கிட்டிருக்கற?" என்று முணு முணுத்துக் கொண்டு போவேன். t_ள்ளி என்பது வன்னிய சமூகத்தார்க்கு வழங்கும் பல பெயர் களுள் ஒன்று.