பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/41 நோக்கத்துக்காகப் பாதையில் சென்று கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்டவரல்லரா அவர்? உடனே தமது முகத்தைச் சுருக்கிக் கொண்டு, 'நீ சொன்ன பொருள் தவறு. உனக்குப் பாடம் சொன்ன வர் யார்?' என்று கேட்டார். + - - Ετάπ இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தின்ன் ஆசிரிய ரின் புலமையைக் குறைத்துப் பேச அவர் தொடங்கியதும் அடிபட்ட புலிபோல் வெகுண்டெழுந்தேன். 'எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த இடம் ரொம்பப் பெரிய இடம். அதெல்லாம் உம்ம கிட்ட ஏன் சொல்லணும்? அவர் கால் தூசிக்குக்கூட நீர் காணமாட்டீர். நீர் இங்கே பாடம் சொல்லிக் கொடுக்கற அழகை நாள்தோறும் பார்த்துக் கிட்டுத்தானே போறேன். இலக்கணப் பிழையில்லாம என்னைக்குச் சொல்லிக் கொடுத்தீர்? உமக்குப் பத்திரிகை யிலே பதில் சொல்ற’’ என்று சுடச்சுடப் பேசிவிட்டு அங் கிருந்து வெருட்டென்று எழுந்தேன். என் சொல்லம்புகளைக் கேட்டு இராமசாமிப் புலவர் திண றிப் போளுர், 'நேராக ஊர்த் தலைவர் பிரம்புசாமிப் பிள்ளையிடம் போய், உன்னைப்பற்றிச் சொல்லி ஊரை விட்டே கிளப்புகிறேன் பார்' என்று சவால் விட்டார். 'முடிந்தால் செய்' என்று கூறிவிட்டு நான் வீடு திரும் பினேன். இரவு எட்டு மணி இருக்கும். நான் சாப்பிட்டுவிட்டு உட் கார்ந்து ஏதோ நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 'தம்பி!' என்று யாரோ மெதுவாக வாசலிலிருந்து குரல் கொடுப்பது கேட்டது; எட்டிப் பார்த்தேன். இராமசாமிப் புலவர் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அவர் அவசர அவசரமாக உள்ளே வந்தார். 'தம்பி! அவர்கள் எல்லாம் என்னிடம் படித்தவர்கள். கிதாப்புக் காக தான் அப்படிப் பேசிட்ட. அந்தப் பாடலுக்கு நீ